வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Thursday, 29 August 2013

ஒரு டாலருக்கு.....ரூ 68


நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து

ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்


நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.

சுதேசி சிந்தனைகள்.......

டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய தினம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது. அதாவது ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 68.xx.

இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி:

இன்னும் ஒரே வாரத்தில் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயரலாம். தினசரி உபயோகிக்கும் அந்நிய நாட்டுப் பொருட்கள் விலை ஏறலாம். (அவ்வாறு ஏறாவிட்டால் அவர்களின் இலாபம் எத்தனை என்பதை எண்ணிப் பார்க்கலாம்). மோட்டார் வாகன உதிரிபாகங்களின் விலை ஏறும். அதே நேரம், ஏற்றுமதியாளர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு. தங்களுக்கு கிடைக்கும் டாலர் ஆர்டர்கள். அரசாங்கத்தின் புண்ணியத்தில், தானாகவே கிடைக்கும் 10% அதிக லாபம்.

புதிய ஏற்றுமதி ஆர்டகளை விலை குறைத்து எடுக்கலாம். இதனால் வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியக் கம்பெனிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவார்கள். இது ஒன்றும் கட்டுப்படுத்த முடியாத விஷயம் அல்ல. அரசாங்கம் ஒரு மாத காலத்திற்கு கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்தால், விரைவில் நிலைமை சரியாகி விடும்.

தங்க இறக்குமதியை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். மிகப் பெரிய அளவில் அந்நிய செலாவணியாக டாலர் வீணாவது இதில் தான்.
உள்நாட்டில் மக்களை பெட்ரோல் மற்றும் டீசலை குறைத்து உபயோகிக்கும் முறைகளை அறிமுகப்படுத்தலாம். பூலிங் எனப்படும் கூட்டுப் பிரயாண முறை, ஒற்றைப் படை எண் மற்றும் இரட்டைப் படை எண் கொண்ட வண்டிகளை சுழற்சி முறையில் சாலையில் ஓட விடலாம்.

வாரம் ஒரு முறை அனைவரும் தமது சொந்தப் பிரயாணங்களை பொதுத்துறை வண்டிகளில் பிரயாணிக்க நிர்ப்பந்திக்கலாம். வாரம் இரண்டு நாள் நகைக் கடைகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கலாம். ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டைப் போன்ற யுனிக் அடையாள அட்டை கொண்டு பெட்ரோல், தங்கம், மற்றும் இறக்குமதி சார்ந்த பொருள்களுக்கு தனி மனித உச்ச வரம்பு கொண்டு வந்து, இறக்குமதியைக் கட்டுப்படுத்தலாம்.
ரூபாயின் டாலருக்கு எதிராக மதிப்பை அரசாங்கமே நிர்ணயித்து, அதற்கான விலையை நிலை நிறுத்தலாம்.

ரூபாய் டிவேல்யுவேஷன் எனும் பொருளாதார உத்தியை இதுவரை அரசாங்கம் கையாண்டதாகத் தெரியவில்லை. அதையும் முயற்சி செய்யலாம். FDI க்கான டிவிடெண்டுகள் மற்றும் வெளிநாட்டு பங்கீடுகளின் லாபங்களை ஆறு மாதம் கழித்தே இந்தியாவிலிருந்து வெளியே அனுப்ப தடை போடலாம். இதற்கெல்லாம் வெளிப்படையான உலக வர்த்தகம் மற்றும் திறந்து விடப்பட்ட சந்தைதான் காரணம். பின் விளைவுகளை ஆராயாமல் செய்யப்பட்ட முடிவுகளால் ஏற்படுகிறது. அதே நேரம் வெளிப்படையான மற்றும் சுதந்திரமாக திறந்து விடப்பட்ட சந்தைகளால் உண்டான இலாபம் மற்றும் பொருட்களால் நாள் நிறைய அனுபவிக்கப் பழகி விட்டோம்.

வெளிநாட்டுக் கார்கள், பெப்சி, கோலா, சீனப் பொருட்கள், கம்ப்யூடர், மடிக்கணினி, சோப்பு, என்று வரிசையாக நிறைய சொல்லலாம். இவைகள் இல்லாமல் நம்மால் வாழ முடியமா? இது தான் திறந்த வெளி சந்தையின் சோக முடிவு. பழக்கப்பட்ட பின் இவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது.

இந்த சந்தைகளால் அழிந்து கெட்ட நாடுகள், லெபனான் மற்றும் பிரேசில் . இதில் இரண்டாவது நாடு தங்களின் தொழில் புரட்சியால் முன்னேறி விட்டது. ஓரு டாலருக்கு நிகரான பிரேசில் ரியல் 2.17. லெபனான் மட்டுமே இன்னமும் அப்படியே இருக்கிறது. ஒரு டாலரின் மதிப்பு அங்கே 1511 லெபனான் லிரா. நாம் எவ்வளவோ பரவாயில்லை.

நம் நாட்டிற்கு இப்போது தேவை, நல்ல ஒரு நிதி அமைச்சர்.

சாதாரண ஒரு குடிமகனான எனக்கே இவ்வளவு விஷயம் தெரிகிறது என்றால் ஒரு கஜானாவை நிர்வகிக்கும் அமைச்சருக்கு எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்? பங்குச் சந்தையை மட்டும் அளவு கோலாக வைத்து செயல்படும் மத்திய நிதி அமைச்சருடைய அளவு கோலும் பீர்பாலுக்கு முகம் மழிக்கும் நாவிதனின் அளவுகோலும் ஒன்றாகவே இருக்கிறது என்பது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட ஒற்றுமையா?

நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.

சோப்பு என்றால் சந்திரிகா , சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பு என்றால் டாபர், குளிர் பானம் என்றால் இளநீர், மற்றும் சாத்துக்குடி ஜூஸ். இப்படி பல வழிகளில் நீங்களும் அந்நிய பொருள்களை சிறுக சிறுக நிராகரித்து, நாட்டு நலனில் அமைச்சரை விட அதிகமாக பங்கு கொள்ளலாம்.

இன்றைய நாளில் நீங்கள் உபயோகிக்கும் வெளிநாட்டுப் பொருள்களில் ஒன்றையேனும் தவித்து, ஒரே ஒரு டாலரை மிச்சப்படுத்துங்கள். ஒரு வேளை இந்தியர்கள் அனைவரும் ஒரு சேர அப்படியே செய்தால் ஒரே நாளில் நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.
— with Palaniyappan Nk and Ajay Arnold.

Monday, 19 August 2013

TET 2013 answer key

TET 2013 Paper I  tentative answer key...
Some New Answers Corrected & Added with Clarification. 
Sl.No
Subject
Question (or) Answer Keys
1Child Development and Pedagogy
(relevant to age group 6 – 11)
2Language I

Tamil/Telugu/Malayalam/Kannada/Urdu
3Language II - English
4Mathematics
5Environmental Studies

THANKS TO http://trbtnpsc.blogspot.in/

TET 18.8.2013 tentative answer key Paper II

Sl.No
Subject
Question (or) Answer Keys
1Child Development and Pedagogy
(relevant to age group 6 – 11)
2Language I

Tamil/Telugu/Malayalam/Kannada/Urdu
3Language II - English
4Mathematics & Science
5Social Science

Tuesday, 30 July 2013

கைக்கோளர்...


மிழ்நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூலின்றித் திண்டாடும் கைக்கோளர் வகுப்பார் சோழப்பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற வீர வகுப்பாயிருந்தனர். அவர்களில் பொறுக்கி எடுத்த வீரர்களைக் கொண்டு சோழசக்கரவர்த்திகள் அகப்பரிவாரப்படையை அமைத்துக்கொள்வது வழக்கம்.அப்படி பொறுக்கி எடுக்கப்பட்ட படைக்கு தெரிஞ்ச கைக்கோளர் படை என்ற பெயர் வழங்கியது.

கல்கி பொன்னியின் செல்வன் பாகம் 2 லிருந்து பெறப்பட்டது..

கொங்குப் பகுதியில் புழங்கும் சில சொற்கள்

(அகரவரிசையில்)

அக்கட்ட, அக்கட்டு. அக்கட்டாலே - அந்த இடம், அந்த இடத்திலே. (நீ அக்கட்டாலே போய் உட்காரு)
அந்திக்கு- இரவுக்கு
அங்கராக்கு - சட்டை
அட்டாரி, அட்டாலி - பரண்
அப்பச்சி , அப்புச்சி- தாய்வழித் தாத்தா
அப்பத்தா- தந்தைவழித் பாட்டி (அப்பாவின் ஆத்தாள்)
அப்பு - அறை. (அவளை ஓங்கி ஒரு அப்பு அப்படா, செவுனி திரும்புகிறாற்போலே)
அம்மாயி - அம்மாவின் அம்மா
ஆகாவழி- ஒன்றுக்கும் உதவாதவன்
ஆட்டம் - போல என்று பொருள்படும் ஒரு சொல்: (அக்காளாட்டம் சும்மா இரு - அக்காளைப் போல் சும்மா இரு)
ஆயா - அப்பாவின் அம்மா
ஆம்பாடு - காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி)
இக்கிட்டு - இடர்பாடு
இட்டேறி - தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)
இண்டம் பிடித்தவன் - கஞ்சன்
உண்டி - (sample) = உண்ணும் பதம்? - தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்
உப்புசம் , உக்கரம் - புழுக்கம்
ஊக்காலி (?ஊர்க்காலி)- பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். ( ரவுடி )
ஊளைமூக்கு - சளி நிரம்பிய மூக்கு
எச்சு - அதிகம்.
எகத்தாளம் - நக்கல், பரிகாசம்
எரவாரம்-கூரைக்கு கீழ் உள்ள இடம்
ஏகமாக - மிகுதியாக,பரவலாக
ஒட்டுக்கா - ஒரேயடியாக, இணைந்து (இரண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாருங்கள் - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)
ஒடக்கான் - ஓணான்
ஒப்பிட்டு, ஒப்புட்டு - போளி
ஒளப்பிரி - உளறு "இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்"
ஒறம்பற - உறவினர் (உறவின்மு்றை) - விருந்தினர்
ஓரியாட்டம் -சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.
ஒருசந்தி - ஒரு வேளை மட்டும் விரதம் இருத்தல்
கட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்
கட்டிச்சோற்று விருந்து - கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு
கடைகால், கடக்கால் - அடித்தளம்
கடகோடு - கடைசி ( கோட்டுக்கடை - கடைசிக்கடை, அந்த கோட்டிலே பாரு - அந்த கடைசியிலே பாரு)
கடையாணி - அச்சாணி
கரடு - சிறு குன்று
கல்யாணம் (கண்ணாலம்) - திருமணம்
காராட்டு காலம் - இனப்பெருக்க காலம் (காராட்டு காலத்தில் திரியும் பூனை ஒரு மாதிரி மதத்துடன் இருப்பதால் அதற்கு காராட்டுப் பூனை என்று பெயர்)
குக்கு - உட்கார்
கூம்பு - கார்த்திகை தீபம் ( கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு )
கூதல்- குளிர், கூதகாலம்- குளிர்காலம்
கொரவளை \ தொண்டை -குரல்வளை
கொழுந்தனார்- கணவரின் தம்பி
கோடு - "அந்தக் கோட்டிலே உட்கார்", பழைமைச்சான்று: "கோடுயர் அடுப்பு" - "பக்கம் உயர்ந்த அடுப்பு" (புறநானூறு 164)
சாடை பேசுகிறான் - குறிப்பாகத் (மறைமுகமாகத்) தாக்கிப் பேசுகிறான்
சாங்கியம் - சடங்கு
சிலுவாடு - சிறு சேமிப்பு
சீரழி - நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)
சீராட்டு - கோபம். (கட்டிக் கொடுத்து மூன்றுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீராடிட்டு வந்துவிட்டது)
சுல்லான் (சுள்ளான்?) - கொசு
செகுனி, செவுனி - தாடை/கன்னம்
செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி
சோங்கு - சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி
சேந்துதல் - தண்ணீர் இறைப்பது (கிணற்றிலே இருந்து தண்ணீர் சேந்தி வா = தண்ணீர் இறைத்துக்கொண்டு வா )
தாரை - பாதை
தொண்டுபட்டி - மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் - ஆட்டைத் தொண்டுபட்டியிலே அடை
துழாவு - தேடு
திரட்டி (திரட்டு) - பெண்ணின் முதிர்ச்சி விழா, பூப்பு நன்னீராட்டு விழா
நங்கை, நங்கையாள் - அண்ணி நாத்தனார்
நலுங்கு - உடல் நலம் குன்றிய ( குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லைச் சொல்ல மாட்டார்கள் - அவர்கள் குழந்தை நலுங்கிவிட்டதாம்)
நசியம் - மாடுகள் சினையாகும் பருவம்
நியாயம் (நாயம்) - பேச்சு ( அவன் பேச்சு யாருக்கு வேணும் - அவன் நியாயம் யாருக்கு வேணும், அங்கே என்னடா பேச்சு - அங்கே என்னடா நாயம் )
நீசதண்ணி- பழையசோற்றுத்தண்ணி
நோக்காடு - நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்றைக்கு வரக் காணோம்.
நோன்பு (நோம்பி) - திருவிழா
பகவதியாயி நோன்பு (பவுதியாயி நோம்பி) - பகவதி அம்மன் திருவிழா
படு - குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை
பழமை - பேச்சு ( அங்கே என்ன பேச்சு - அங்கே என்ன பழமை )
பாலி - குளத்தை விடச் சிறிய நீர்நிலை.
பிரி - பெருகு, கொழு ("பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்")
வட்டல் -தட்டு
புண்ணியாசனை - (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா
பெருக்கான் - பெருச்சாளி
பொக்கென்று - வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)
பொட்டாட்டம் - அமைதியாக
பொடக்காலி - புழக்கடை
பொடனி, பொடனை - (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து
பொழுதோட- மாலைநேரம்
பொறந்தவன் - உடன் பிறந்த சகோதரர்
பொறந்தவள் - உடன் பிறந்த சகோதரரி
மச்சாண்டார் - கணவனின் அண்ணன்
கொழுந்தியாள் - கணவனின் தங்கை
மலங்காடு - மலைக்காடு
மசையன் - விவரமற்றவன்
மழைக்காயிதம் - பாலிதீன் காகிதம்
மளார் - விரைவாக, சீக்கிரம் (மளார் என்று தனியாக சொல்லமாட்டார்கள். மளாரென்று வா\போ, மளாரென்று வேலையை முடி என்று அடுத்த சொல்லோடு இணைந்து தான் இச்சொல் வரும்)
முக்கு - முனை, முச்சூடும்- முழுவதும்,. மூலை, வளைவு
வெகு - அதிக
வேளாண்மை (வெள்ளாமை) - உழவு, விவசாயம்
வேசகாலம்- வெய்யில்காலம்
வேகு வேகுன்னு- அவசரஅவசரமாய்
சீக்கு - நோய்
பன்னாடி - கணவன், முதலாளி (பண்ணைக்கு சொந்தக்காரன்)
முட்டுவழி - முதலீடு
கொழு -ஏர்மனை
கொடாப்பு ‍- கோழிகளை அடைத்து வைக்கப் பயன்படும் பெரிய கூடை (தென் மாநிலங்களில் பஞ்சாரம் என்று சொல்லப்படும்)
ரக்கிரி -கீரை

உக்காரு - உட்கார்


வழி= இமையவர்மன் இனியராஜா (facebook)

Tuesday, 23 July 2013

உயிர் மெய்யாகியத் தமிழ்!

உயிராகி மெய்யாகிஉயிர் மெய்யாகியத் தமிழ்!

ஒள (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலிஉயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

க்ங்ச்ஞ் ட்ண்த்ந்ப்ம்ய்ர்ல்வ்ழ்ள்ற்ன் (மெய் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும்இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

நம்மொழிக்குத் தமிழ் என்று எப்படிப் பொருள் வந்தது என்பதைக் காண்போம்.

 - ஆறும் வல்லினம்.
 - ஆறும் மெல்லினம்.
 - ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதன் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் (படர்க்கை), (தன்னிலை), (முன்னிலைஎன்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும்மெல்லினத்தில் ஒன்றும்இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர்அவை த்ம்ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+ கூடி 'வாகவும்ம்+ கூடி 'மியாகவும்ழ்+ கூடி "ழுவாகவும் என்று தமிழு என்று ஆக்கிபிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழைத்தனர்அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!

ஓர் எழுத்து ஒரு சொல் ! 

ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லதுஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.

மைநீகைகோவாபூபோபை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம்ஆனால்தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.

ஒரு எழுத்துச் சொல்லாகி தருகிற அர்த்தங்களோடு பார்ப்போம்.

 - பசு 
 - பறவை
 - இறைச்சி
 - கணை
 - தலைவன்
 - வியப்பு
மா - பெரிய
மீ - மேல்
மூ - மூப்பு
மே - மேன்மை
மை - இருள்
மோ - மோதுதல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்
சா - சாதல் 
சீ - இலக்குமி
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு
பூ - மலர்
பே - நுரை
பை - பசுமை
போ - செல்
நா - நாக்கு
நீ - முன்னால் இருப்பவர்
நே - அருள்
நை - இகழ்ச்சியை குறிப்பத்து
நோ - வலி
கா - பாதுகாப்பு
கூ - வெல்
கை - ஒப்பணை
கோ - அரசன்
வீ - மலர்
வை - வைக்கோல்
வௌ - கைப்பற்றுதல்
யா - கட்டுதல்
நொ - துன்பம்
து - உணவு 

இந்த அனைத்து ஓர் எழுத்துச் சொற்களையும் கவனித்தீர்களானால் ஓர் ஆச்சர்யம் உங்களுக்குத் தெரியும்இவற்றில் நொ,து என்ற இரண்டு எழுத்துக்கள் மட்டும் தான் குறில் என்கிற குறைந்த கால அளவுடைய எழுத்துக்கள்மற்றவை எல்லாம் நீண்ட ஒலி அளவுடைய நெடில்கள் என்பதுதான் அந்த ஆச்சர்யம்

தமிழனின் வரலாறு என்னவென்று இதுவரை துல்லியமாக யாரும் சொல்லவில்லைஆங்கில மோகம் கொண்டு அலையும் இன்றைய மக்களுக்கு தன் தாய்மொழியின் அருமை அறவே மறந்துவிட்டதுதமிழ் மொழியின் தோற்றம் குறித்து எனக்கு தோன்றிய ஒரு சின்ன உதாரணம்.
திருக்குறள் – ஏன் என்றால்தமிழ் என்று சொன்ன உடனே நம்ம ஞாபகத்திற்கு வருவது அதுதானே.

திருக்குறள் கி.மு.31-ல் தமிழ்கடைசங்கத்தில்அரங்கேற்றபட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததேஆனால்நாம் யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கடைசங்கம் தான் தமிழின் கடைசிச் சங்கம்அந்தக் கடைசிச் சங்கத்தின் காலமே கி.மு.31 என்றால் இரண்டாம் மற்றும் முதல் சங்கம் எப்பொழுது தோன்றி இருக்கும்...?!

திருவள்ளுவர் தொல்காப்பிய இலக்கணபடி திருக்குறள் இயற்றியுள்ளார்ஆனால்தொல்காப்பியரோஅகத்திய இலக்கணத்தை தழுவி தனது இலக்கணத்தை இயற்றியுள்ளார்அப்படியென்றால் அகத்தியர் எப்பொழுது தனது இலக்கணத்தை இயற்றிருப்பர்..?! தமிழனின் இலக்கிய அறிவுக்கு இது ஒரு சான்று.

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மொழியில் நன்கு தேர்ந்த பிறகே இலக்கணத்தில் பழக முடியும்இவர்கள் இலக்கணத்தில் நன்கு பழகியவர் என்றால் அவர்கள் தமிழ் மொழியில் நன்கு பழகியிருக்க வேண்டும்அப்படி எனில் தமிழ் மொழி எப்பொழுது தோன்றி இருக்க வேண்டும் என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்.

இதில் இன்னும் முக்கியமானது என்னவெனில் தமிழ் மக்கள் எப்பொழுது தோன்றியிருப்பார்கள் என்பதேஏனெனில் ஒரு மக்கள் சமுதாயம் தான் மொழியை உருவாக்குவதுஅவர்கள் மொழியை உருவாக்கியிருக்கின்றனர் என்றால் அவர்கள் தோன்றி பல ஆண்டுகள் கடந்து ஒரு நாகரீக முன்னேற்றம் அடைந்து அதன் பின்னரே மொழியை உருவாக்கியிருக் கின்றனர்.

நான் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வேன் தமிழன் என்று. !!!