வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Friday 1 August 2014

விவேகானந்தர்......




விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்...

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்...

என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும், ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப் போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டுவிடேன்.

இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..

இதுதான் அறிவின் முதிர்ச்சி...!

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு...!

Thursday 31 July 2014

இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் ?

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் ?

01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.

02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.

03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.

04. 1835 ல் அவரது காதலி மரணம்.

05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.


06. 1838 ல் தேர்தலில் தோல்வி.

07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.

10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.

11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.

12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை.

உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்.