வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Saturday 19 June 2021

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ...

தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 

 நாளை மறுநாள் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் 21ம் தேதி முதல் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மே மாதம் ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பரவல் 36 ஆயிரம் வரை இருந்தது.

 


 இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். அதன்படி, கடந்த மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை தொடர்ந்து இரண்டு வாரங்கள் எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

 இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிபடிப்படியாக குறைய தொடங்கியது.  தொடர்ந்து, கடந்த 7ம் தேதி முதல் வருகிற 21ம் தேதி (திங்கள்) அதிகாலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. அதன்படி காய்கறி, பலசரக்கு, மீன், இறைச்சி, ஹார்டுவேர், சலூன், டீக்கடை, செல்போன், இரண்டு - நான்கு சக்கர பழுது பார்க்கும் கடைகள் உள்ளிட்டவைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.  முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து தற்போது தினசரி பாதிப்பு 9 ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பு 500 என்ற அளவில் உள்ளது. கோவை, ஈரோடு மாவட்டத்தில் மட்டுமே 1000ஐ தாண்டியுள்ளது. இதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21ம் தேதி (திங்கள்) அதிகாலையுடன் முடிவடைகிறது. இதையொட்டி, தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது மற்றும் பொது போக்குவரத்தை குறைந்த அளவில் (50 சதவீத இருக்கைகளுடன்) அனுமதிப்பது உள்ளிட்டவைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

 பகிர்வு: தினகரன்

Friday 18 June 2021

ஒரு கிலோ வாழைப்பழம் 3,300 ரூபாய் ..?

கடும் உணவுப்பஞ்சத்தால் வாடும் வடகொரியா . !


கொரோனா சூழ்நிலை காரணமாக வடகொரியா கடும் உணவுப் பஞ்சத்தால் வாடும் என்று பல நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்த நிலையில் தற்போது அது உண்மை என்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்நிலையில் தற்போது அது உண்மை என்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் ஒப்புக் கொண்டுள்ளார் . உள்ளே என்ன நடக்கிறது என்பதே வெளியே தெரியாமல் இருக்கும் நாடு எது என்றால் அது வடகொரியா தான் . வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை அறிய செயற்கைகோள் புகைப்படங்கள் மட்டுமே ஒரேவழியாக இருந்தது . உலகெங்கும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் , வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்று கிம் ஜாங் உன் கூறி வந்தார் . மேலும் வடகொரியாவுக்கு தேவையான உணவு பொருள்கள் , மருந்துகள் அனைத்தும் சீனா வடகொரியா சென்றது .

கொரோனா காரணமாக சீனாவால் போதிய உணவு பொருள்களை வடகொரியாவுக்கு அனுப்பமுடியாத நிலை இருந்து வந்தது . இதை குறிப்பிட்டு வடகொரியா கடும் உணவுப்பஞ்சத்தால் வாடும் என்று பல நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்த நிலையில் தற்போது அது உண்மை என்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார் . கிடைத்த தகவலின் படி அங்கு முதன்மை உணவுப்பொருள்களான சோளம் , அரிசி போன்றவற்றிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் , லட்சக்கணக்கான மக்கள் பட்டினியில் தவிப்பதாகவும் , இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்ணும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது . அங்கு தற்போது ஒரு கிலோ வாழைப்பழம் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 3,300 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  .

 Source : மாலை முரசு

Thursday 17 June 2021

விருதுகளுக்கு 2021 செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்..

 🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
பத்ம விருதுகளுக்கு 2021 செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்


🏆🏆 *2022-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படவிருக்கும் பத்ம விருதுகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை 2021 செப்டம்பர் 15 வரை அனுப்பலாம்.


 

 https://padmaawards.gov.in எனும் தளம் வழியாக மட்டுமே இதை செய்ய முடியும்.*

🎖️🎖️ *1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகியவை ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகள்/சேவைக்காக இவை வழங்கப்படுகின்றன.*

🎭🎖️ *பத்ம விருதுகளை ‘மக்கள் பத்ம விருதுகளாக’ மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, சுய விண்ணப்பம் உள்ளிட்ட விண்ணப்பம்/பரிந்துரைகளை செய்யுமாறு அனைத்து மக்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.*

*இது குறித்த மேலும் தகவல்களை உள்துறை அமைச்சகத்தின் இணையதளமான www.mha.gov.in-ல் விருதுகள் மற்றும் பதக்கங்கள் எனும் தலைப்பில் காணலாம். விருதுகள் குறித்த விதிமுறைகளை https://padmaawards.gov.in/AboutAwards.aspx எனும் இணைய முகவரியில் காணலாம்.*

*மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:*

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725968

Wednesday 16 June 2021

மாவட்ட ஆட்சியர்களின் பெயர் பட்டியல் 16.6.2021

 
 தமிழ்நாடு அரசு 
அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் விவரங்கள்.
 


 


 

Monday 14 June 2021

30 தேதிக்குள் கெடு...

 ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க 30 தேதிக்குள் கெடு.

தற்போது பெரும்பாலானோரிடம் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவை உள்ளது. 

 


ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு கூறியது. அதற்கு விதிக்கப்பட்ட கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு கடைசியாக ஜுன் 30ம் தேதி என அறிவிக்கப்பட்டது. எனவே, பலரும் இரண்டையும் இணைத்து வருகின்றனர்.

ஜூன் 30ம் தேதிக்குள் இதை செய்யாவிட்டால் ஜூலை 1ம் தேதிக்குள் பின் ரூ.1000 அபராதமாக விதிக்கப்படும். மற்றும் வேறு பல பிரச்சனைகளையும் மக்கள் சந்திக்க நேரிடும். இருசக்கர மற்றும் மற்ற வாகனங்களை வாங்கவோ விற்கவோ முடியாது. வங்கியில் கணக்கு துவங்க முடியாது. கிரெடிட்/டெபிட் விண்ணப்பிக்க முடியாது.

 ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்டில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் செலுத்த முடியாது. அதேபோல் ரிசர் வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பத்திரங்கள் வாங்க முடியாது.

Source :  cini reporters.

இந்திய ரூபாயின் மதிப்பு இப்படியா...

 இந்திய ரூபாயின் மதிப்பு 1947 முதல் 2020 வரை ஒரு பார்வை..

 


  1 USD to INR Rates From 1947 to 2020
Year    Exchange rate(INR per USD)
1947                     3.30
1949                     4.76
1966                     7.50
1975                     8.39
1980                     7.86
1985                   12.38
1990                   17.01
1995                   32.427
2000                   43.50
2005(Jan)          43.47
2006 (Jan)         45.19
2007 (Jan)         39.42
2008 (Oct)         48.88
2009 (Oct)         46.37
2010 (22 Jan)    46.21
2011 (April)        44.17
2011 (21 Sep)    48.24
2011 (17 Nov)    55.39
2012 (22 June)    57.15
2013 (15 May)    54.73
2013 (12 Sep)    62.92
2014 (15 May)    59.44
2014 (12 Sep)    60.95
2015 (15 Apr)    62.30
2015 (15 May)    64.22
2015 (19 sep)    65.87
2015(30 nov)    66.79
2016(20 Jan)    68.01
2016(25 Jan)    67.63
2016(25 Feb)    68.82
2016 (14 Apr)    66.56
2016 (22 Sep)    67.02
2016 (24 Nov)    67.63
2017 (28 Mar)    65.04
2017 (28 Apr)    64.27
2017 (15 May)    64.05
2017 (14 Aug)    64.13
2017 (24 Oct)    64.94
2018 (9 May)     64.80
2018 (Oct)         74.00
2019 (Oct)         70.85
2020 (Jan)         70.96

Source :  oneindia

14 வகை பொருட்களை தெரிஞ்சுக்கோங்க..

 14 வகை பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்றுடன் முடிவடைகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


தமிழகத்தில் கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு