வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Thursday 18 August 2011

உபுந்து படிக்கலாம் வாங்க !!!

லினிக்ஸ் என்ற சொல்லே ஏதோ கணினியில் கரைகண்டவர்களுக்கு மட்டும்தான் என்ற நினைப்பை பெருமளவில் மாற்றி உதவியது உபுந்து லினிக்ஸ் வெளியீடு. அதேபோல நீண்டகாலமாக வின்டோஸை நம்பி மட்டுமே கணினிகளை வெளியிட்டு வந்த HP, Dell நிறுவனங்களும் உபுந்துவுடன் கணினிகளை வெளியிட ஆரம்பித்தது. நோட்புக் கணினிகளுக்கு சிறந்தது உபுந்துதான் என்று பலரும் கருதுமளவிற்கு சிறப்பான வசதிகளுடன் தன்னை காலத்துக்குகாலம் மேம்படுத்தி இலவசமான சிறந்த இயங்குளமாக உபுந்து வளர்ந்து வருகிறது.


நீங்கள் உபுந்துவுக்கு மாற விரும்பினால் அல்லது உபுந்து பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கு இந்த “Ubuntu pocket guide and reference” என்கின்ற இந்த புத்தகம் பயனுள்ளதாக இருக்கும். இதன் அச்சடிக்கப்ட்ட பிரதி 10 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்பட்டாலும் மின்புத்தகம் இலவசமானது.

 இங்கே சென்று தரவிறக்கி கற்றுக்கொள்ளுங்கள்.
நன்றி!! ஊரோடி...

தமிழ் வழி E--books (பகுதி - 3)

என்னருமை நண்பர்களே.. சமையல் தொடர்பான E-Book ஐ பெற கீழ்கண்ட இனங்களைச் சொடுக்கவும்.


சமையல் குறிப்புகள்

தமிழ் வழி E--books (பகுதி - 2)

தமிழ் வழி கணிணி தகவல்களுக்கு.. தரவிறக்கம் செய்ய கீழ்கண்ட இனங்களை சொடுக்கவும்..

நன்றி ! http://senthilvayal.wordpress.com

தமிழ் வழி E--books (பகுதி - 1)

 நமது தமிழ் மொழியில்  மின் புத்தகங்களை படித்து பயன்பெற கீழ்கண்ட இனங்களில் கொடுத்துள்ளேன்... DOWNLOAD செய்ய தலைப்புகளைச் சொடுக்கவும்.
நன்றி! http://senthilvayal.wordpress.com


    தமிழ் எழுத்துருக்கள் - 500 வகைகள்

    வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த விரும்புகிறீர்களா ... அப்படியானால் இது உங்களுக்குத் தான் கீழே உள்ள லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500 எழுதுருக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .புகைப்பட மற்றும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும் .f
    நன்றி ! - http://tamilwares.blogspot.com

    Wednesday 17 August 2011

    இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா..?

          சாலையில் கடுமையான வெயிலில் நடக்கும் போதெல்லாம், ஓரமாய், அமைதியாய் நிழலைப் பொழியும் மரம் தாயின் மடிபோல் சுகமாய் அரவணைத்துக் கொள்ளும். ஒரு போதும் நினைத்துப் பார்ப்பதில்லை, இந்த மரத்திற்கு விதையிட்டு, நீரூற்றி வளர்த்தது யார், இந்த மரத்தின் வரலாறு என்னவாக இருக்கும் என்று.

    மரம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில்லாத துரதிருஷ்டம், அந்த இரண்டு நபர்களைச் சந்தித்த போது தகர்ந்து போனது. மரத்தின் மேல கணக்கிலடங்கா காதலும் வெறியும் மனதில் வேரூன்றியது… ஈரோடு மாவட்டம் இந்த இரண்டு நபர்களைப் பெற என்ன தவம் செய்ததோ!!!?
    ஈரோடு அருகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து “ஏனுங்க இந்த மரம் நடுவாரே” என்று கேட்க ஆரம்பிக்கும் போதே “அட நாகாராஜண்ணன கேக்றீங்களா, அந்த வழியாப் போங்க” என்று பெருமிதத்தோடும், நம்மை பார்ப்பதில் கொஞ்சம் வெட்கத்தோடும் வழி காட்டுகிறார்கள்.

    இந்தியாவில் நெசவு தொழில் - கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கத்தில்.

    கிழக்கிந்திய கம்பெனியின் தோற்றம்,ஆரம்ப கால வளர்ச்சி மற்றும் தேயிலை தொடர்பு பற்றியும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அது இந்திய தொழில் துறையை எப்படி நசித்தது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.கி.இ.கம்பெனி வியாபாரத்தை மட்டும் நடத்திய வரை அது ஒரளவுக்கு இந்தியாவிற்கு நல்லதாகத்தான் இருந்தது.அவுரங்கசீப்பின் கடைசி காலத்திலிருந்து முகலாய பேரரசு பலமிழக்க தொடங்கியது. அவரின் மறைவிற்கு பிறகு முகலாய பேரரசு இந்தியாவின் மீது இருந்த தன் கட்டுபாட்டை இழக்க தொடங்கியது. அந்த காலத்தில் நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்து இந்தியாவை வெற்றி கொண்டதோடு இல்லாமல் டெல்லியில் ஒரு ரத்த ஆறையே ஓட விட்டு சென்றான். இது முகலாய பேரரசை மேலும் பலவீனபடுத்தியது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் பிரான்சு கிழக்கிந்திய கம்பெனிகள் இந்தியாவின் தெற்கு பகுதி மற்றும் பிற பகுதிகளை சிறிது சிறிதாக தன் ஆதிக்கத்தில் எடுத்து வர ஆரம்பித்தார்கள்.பல்வேறு மகாணங்களை வென்று அல்லது அங்கு தனது அதரளாவர்களை பொம்மை அரசாக வைத்து தன் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். பிளாசி போரின் வெற்றிக்கு பிறகு பிரன்ச்சு ஆதிக்கம் சிறிது சிறிதாக குறைந்து இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் விரிய தொடங்கியது.இந்த கால கட்டத்தில் இந்தியாவின் நெசவு தொழில் எவ்வாறு வளர்ச்சி அடைந்து வீழ்ச்சி அடைந்தது என்று பார்ப்போம்.