வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Monday 10 September 2012

பறவைக்கும் குடி நீர்ப் பற்றாக் குறை!

பயிர் விளைச்சலை உயர்த்துவதற்காக ரசாயன உரம், ரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மதிப்புக் கூட்டு வரியைத் தள்ளுபடி செய்வதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.


பயிர் விளைச்சலுக்கு பெரிய முட்டுக் கட்டையாக இருப்பது தண்ணீர்ப் பற்றாக்குறை.

இயற்கை வேளாண்மையை செயல்படுத்தினால் தண்ணீர் தேவையும் குறையும். மின்சக்தி தேவையும் குறையும்.

வளர்ச்சி என்ற போர்வையில் தொழிற்சாலைக் கழிவுகள் ஆறு, குளம் போன்ற மேற்பரப்புநீரை மாசு படுத்துகின்றன.

சட்ட விரோதமான இச்செயலைத் தடுத்து நிறுத்துவதில் மக்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதன் மூலம் பயன்பாட்டுக்கான தண்ணீர் அளவை உயர்த்த முடியும்.

ஏரிகளில் சீமைக் கருவேல் வளர்ந்து, கிடைக்கும் சிறிதளவு மழை நீரையும் ஊறிஞ்சி ஆவியாக்குகிறது. சீமைக் கருவேல் மரங்களை அப்புறப்படுத்துவதன் மூலம் ஏரிகளை ஆழப்படுத்த முடியும் நீர் இருப்பைக் கூட்ட முடியும்

மன்னர்கள் வெட்டிய ஏரிகுளங்கள் பராமரிப்பு இன்மையால் மேடுபட்டுப் போய் தாம்பாளங்களாகக் காட்சி அளிக்கின்றன இவற்றை ஆழப்படுத்தி அள்ளப்படும் வண்டலை சிறு குறு உழவர்கள் நிலங்களில் பரப்பினால் மழை வரும்போது வயலில் ஈரப்பிடிப்பு கூடும். ஏரிகளின் கொள்ளளவு உயர்வதால் வெள்ளச் சேதம் தவிர்க்கப்படும். வேளாண் விளைச்சல் உயரும்.

அடிப்படைத் தேவையான தண்ணீர்த் தேவையை சீர் செய்யாமல் கம்பெனிகளுக்கு சலுகை செய்வதால் சிக்கல் தீராது. மூடிய குழாயில் சொட்டும் நீர் காக்கைக்குப் போதும். மனிதர்க்குப் போதாது.