வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Tuesday 30 September 2014

அழகான குறிப்புகள்..!



1. தலை முடி வளர:
                              அரை லிட்டர் நல்லெண்ணெய்யை காய்ச்சி இறக்கி அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயை அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வரவும். தலையில் தேய்க்கு முன் இலேசாக சூடு படுத்தித் தேய்க்கவும்.

2. வளமான தலைமுடிக்கு:
                                         தலை குளிக்கப் போகுமுன் பாதாம் எண்ணெயுடன் தேங்காய்  எண்ணெயை சம அளவில் கலந்து தலையில் தேய்த்து அரை மணி
நேரம் ஊற வைத்து தலை குளிக்கவும். இது முடி கொட்டுவதையும்
நிறுத்தும்.

3. முடி கொட்டுவது நிற்க:
                                         ஆலிவ் எண்ணெயில் ஒரு முட்டை கலந்து தேய்த்து தலை குளித்து வரவும்.

4. கண்கள் கீழுள்ள கருவளையங்களைப் போக்க:
                                                                                அரை ஸ்பூன் விளக்கெண்ணெய், அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து குழைத்து தடவி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

5. பாத வெடிப்பு:
                                தொடர்ந்து கடுகெண்ணெயைத் தடவி வந்தால் சரியாகி விடும்.

6. தலையில் ஏற்படும் வழுக்கை, சொட்டை முதலியவை நீங்க:
                                                             தாமரைஇலைகளைப் பறித்து சாறெடுத்துக்கொள்ளவும். அதற்கு சமமான அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சவும். நீர்ப்பசை நீங்கி தைலம் மேலே மிதக்கத் தொடங்கியதும் ஆறவிட்டு பத்திரப்படுத்தவும். இதை தினமும் தடவி வந்தால் வழுக்கை மறைந்து முடி நன்கு வளரும்.

7. முகப்பொலிவிற்கும் அழகிற்கும் ஒரு face pack!

தேவையான பொருள்கள்:
பாசிப்பயிறு- 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள்- 100 கிராம்
கசகசா- 10 கிராம்
உலர்ந்த ரோஜா மொட்டு- 5 கிராம்
பூலாங்கிழங்கு- 5 கிராம்
எலுமிச்சை இலை, வேப்பிலை, துளசி இலை மூன்றும் 2 கிராம்.

மொத்தமாக அரைத்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் சிறிது எடுத்து தயிரில் கலந்து முகம் கழுத்தில் தடவி வந்தால்
மாசு மருவற்ற முகம் கிடைப்பதுடன் நிறமும் நாளடைவில் சிவக்க ஆரம்பிக்கும்.