வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Sunday 3 November 2013

தமிழில் "கிரெம்ளின் மாளிகை"

Great Kremlin Palace, Moscow, Russia- தமிழில் "கிரெம்ளின் மாளிகை"(ரஷ்ய அதிபர் மாளிகை)

தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ அவமானமாகப் பார்க்கும் நிலை இன்றுள்ள தமிழர்களிடையே பரவியுள்ளது. நம் மொழியை நாம் பேசவே தயங்குகிறோம் அந்த அளவுக்குப் போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கௌரவிக்கிறது, கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.

உலகில் 6 மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சம்ஸ்கிருதம். இந்த 6 மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி, எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக தமிழ்மொழி தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை' எனத் தமிழில் எழுதினோம்'' என்று கூறுகிறார்கள். மேலும், அங்கே வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களுள் நமது திருக்குறளும் ஒன்று.

வெளிநாட்டில் உள்ளவர்களுக்குக் கூட நம் தமிழின் பெருமை தெரிந்துள்ளது. ஆனால், நாமோ தமிழைக் காப்பாற்ற கருத்தரங்கு நடத்திக் கொண்டிருக்கிறோம் தமிழராக பிறந்து தமிழ் பேசத் தயங்கும் தமிழர்கள், வியாபார நிலையங்களில் தமிழ் பெயரை பொறிக்க தயங்கி ஆங்கிலத்தில் வைத்திருக்கும் தமிழர்கள் இனியாவது தமிழ்மொழியின் அருமை பெருமையை உணர்ந்தால் சரி!

Monday 28 October 2013

மின்சாரம் இல்லை...தமிழில் தகவல் அறிய..


மாலை வீடு திரும்பியவுடன் , வீட்டில் மின்சாரம் இல்லை. மகளிடம் விசாரித்தேன், மூன்று முறை இதுவரை அறிவிக்கப்படாத மின்வெட்டு என தெரிந்துகொண்டு, காலாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள மகளுக்கும் பயனுள்ளதா ஏதாவது கற்றுக்கொடுக்கலாமே என்று முடிவுசெய்தேன்.

155333
டயல் செய்ய சொல்லி , தமிழில் தகவல் அறிய எண் ஒன்றை அழுத்தவும் என்ற குரலுக்கு ஏற்ப அழுத்திவிட்டு காத்திருந்தாள். அந்தபக்கம் வழக்கமா பேசக்கூடிய நபர் , இன்னும் அரைமணி நேரத்தில் கரண்ட் வந்துவிடும் என சொல்லிவிட்டு டொக்கென்று வைத்துவிட்டார். மறுபடியும் ஃபோன் போட சொன்னேன். புகார் எண் கண்டிப்பாக வேண்டும் என கூறியவுடன்தான் நம் முகவரியையே கேட்க ஆரம்பித்தார். சொன்னபடியே அரைமணிநேரத்தில் மின்சாரமும் வந்தது.

நமக்கு மின்வெட்டு ஏற்பட்டாலே சலித்துக்கொள்கிறோம். நமது கடமை, உரிமை என்னவென்றே தெரியாமல் புலம்புவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளோம். அறியாமையை ஒழிப்போம், விழிப்புணர்ச்சி பெறுவோம்.

இனி மின்வெட்டு ஏற்பட்டால் நீங்கள் டையல் செய்யவேண்டிய எண் 155333, மறவாமல் புகார் எண்ணையும் கேட்டுவாங்கி குறித்துக்கொள்ளுங்கள்.

மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்

http://youtu.be/7TByE86yrt8

Friday 25 October 2013

வருமான வரி சோதனையை தவிர்க்க..!



* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால் வங்கியானது வருமான வரித்துறைக்கு அந்த வாடிக்கையாளர் வரி கட்ட தகுதியுடையவர் என்பதை தெரிவித்து விடும்.

*
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்திருந்தால் அவர்களும் வரி செலுத்த தகுதியுடையவராவார்கள். அவர்களின் விவரமும் வங்கியின் மூலமாக வருமான வரித் துறையினருக்கு தெரிவிக்கப்படும்.

*
ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் அந்த நபரின் விவரங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தாரால் வருமான வரித்துறைக்கு போய்ச் சேரும்.

*
பாண்டுகளிலோ அல்லது ஃபிக்ஸட் டெபாஸிட்களிலோ வருடத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் அவர்களின் விவரங்களும் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்படும்.

*
வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பங்குகளில் அல்லது .டி.எஃப்.களில் முதலீடு செய்தால் அவர்களின் விவரம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்.

* 30
லட்ச ரூபாய் மதிப்பிலான வீடோ, நிலமோ வாங்கினால், அதன் விவரம் பத்திரப் பதிவு துறை மூலமாக வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும்.

அந்த வகையில் மேலே கண்ட முறையில் ஏதாவது பரிவர்த்தனை செய்திருந்தால் அதை குறிப்பிட்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்துவிடுங்கள். இல்லை என்றால் வருமான வரித் துறையின் அதிரடி ரெய்டை சந்திக்க வேண்டி வரும்.