வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Friday, 25 October 2013

வருமான வரி சோதனையை தவிர்க்க..!



* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால் வங்கியானது வருமான வரித்துறைக்கு அந்த வாடிக்கையாளர் வரி கட்ட தகுதியுடையவர் என்பதை தெரிவித்து விடும்.

*
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்திருந்தால் அவர்களும் வரி செலுத்த தகுதியுடையவராவார்கள். அவர்களின் விவரமும் வங்கியின் மூலமாக வருமான வரித் துறையினருக்கு தெரிவிக்கப்படும்.

*
ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் அந்த நபரின் விவரங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தாரால் வருமான வரித்துறைக்கு போய்ச் சேரும்.

*
பாண்டுகளிலோ அல்லது ஃபிக்ஸட் டெபாஸிட்களிலோ வருடத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் அவர்களின் விவரங்களும் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்படும்.

*
வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பங்குகளில் அல்லது .டி.எஃப்.களில் முதலீடு செய்தால் அவர்களின் விவரம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்.

* 30
லட்ச ரூபாய் மதிப்பிலான வீடோ, நிலமோ வாங்கினால், அதன் விவரம் பத்திரப் பதிவு துறை மூலமாக வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும்.

அந்த வகையில் மேலே கண்ட முறையில் ஏதாவது பரிவர்த்தனை செய்திருந்தால் அதை குறிப்பிட்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்துவிடுங்கள். இல்லை என்றால் வருமான வரித் துறையின் அதிரடி ரெய்டை சந்திக்க வேண்டி வரும்.

தமிழரின் அளவைகள் மற்றும் கணக்கீடுகள்.

இறங்குமுக இலக்கங்கள்

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்;)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்



அளவைகள்
நீட்டலளவு

10 கோன் -                                              1 நுண்ணணு
10 நுண்ணணு -                                      1 அணு
8 அணு -                                                1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் -                                      1 துசும்பு
8 துசும்பு -                                              1 மயிர்நுணி
8 மயிர்நுணி -                                        1 நுண்மணல்
8 நுண்மணல் -                                      1 சிறுகடுகு
8 சிறுகடுகு -                                         1 எள்
8 எள் -                                                  1 நெல்
8 நெல் -                                                1 விரல்
12 விரல் -                                             1 சாண்
2 சாண் -                                               1 முழம்
4 முழம் -                                             1 பாகம்
6000 பாகம் -                                        1 காதம்(1200 கெசம்;)
4 காதம் -                                             1 யோசனை

பொன்நிறுத்தல்

4 நெல் எடை -                                      1 குன்றிமணி
2 குன்றிமணி -                                     1 மஞ்சாடி
2 மஞ்சாடி -                                          1 பணவெடை
5 பணவெடை -                                    1 கழஞ்சு
8 பணவெடை -                                    1 வராகனெடை
4 கழஞ்சு -                                           1 கஃசு
4 கஃசு -                                               1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி -                                  1 வராகனெடை
10 வராகனெடை -                              1 பலம்
40 பலம் -                                           1 வீசை
6 வீசை -                                            1 தூலாம்
8 வீசை -                                            1 மணங்கு
20 மணங்கு -                                     1 பாரம்

முகத்தல் அளவு

5 செவிடு -                                        1 ஆழாக்கு
2 ஆழாக்கு -                                     1 உழக்கு
2 உழக்கு -                                       1 உரி
2 உரி -                                             1 படி
8 படி -                                              1 மரக்கால்
2 குறுணி -                                       1 பதக்கு
2 பதக்கு -                                         1 தூணி

பெய்தல் அளவு

300 நெல் -                                    1 செவிடு
5 செவிடு -                                    1 ஆழாக்கு
2 ஆழாக்கு -                                 1 உழக்கு
2 உழக்கு -                                   1 உரி
2 உரி -                                         1 படி
8 படி -                                          1 மரக்கால்
2 குறுணி -                                   1 பதக்கு
2 பதக்கு -                                    1 தூணி
5 மரக்கால் -                                1 பறை
80 பறை -                                     1 கரிசை
48 96 படி -                                    1 கலம்

Thursday, 3 October 2013

பணம், currency

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.  பணத்தை விரும்பாதவர்கள் உலகத்தில் இன்று யாரும் இல்லை. பழங்காலத்தில் ஒரு பழமொழி ஒன்று உண்டு ”பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” என்று. ஆனால் அந்த பழைய மொழி இன்று மாறி ”பணம் மெத்தையில் குணம் பாடையில் ” என்று சொல்லும் அளவிற்கு பணம் என்ற காகிதங்களின் மதிப்பு உலகத்தின் உயர்ந்த நிலையில் உள்ளது. மனிதனின் ஆசைகள்தான் இந்த உலகத்தில் தோன்றி இருக்கும் அனைத்து அதிசயங்களுக்கும் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும் . ஆனால் அதே ஆசைகள்தான் மனிதனின் அழிவிற்கும் காரணம் என்பதை நம்மில் பலர் அறியவில்லை. இந்த ஆசைகளில் இன்று முதன்மையில் இருப்பது பணம் என்றுதான் சொல்லவேண்டும். இனி வரும் காலத்தில் காசு

இல்லாத மனிதன் சுவாசிப்பது கூட சாத்தியமற்றுப்  போகும் நிலை வரலாம் .
சரி இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இனி நாம் விசயத்திற்கு வருவோம் . இது வரை நாம் பயன்படுத்திய பணங்கள் காகிதங்களாகவும், நாணயங்களாகவும்தான் பார்த்து இருக்கிறோம் . ஆனால் இப்பொழுதைய நிலையில் பல வெளி நாடுகளில் பிளாஸ்டிக்குகளால் செய்யப்பட்டக் கரன்சிகளும் உருவாகத் தொடங்கிவிட்டன . நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. பணத்திற்கு செலாவணி என்ற பெயரும் உண்டு. செலாவணி என்பது பணப்புழக்கத்தைக் குறிக்கும்.


நமது தேவைகளுக்கு தேவையானப் பல வகைப் பொருட்களை வாங்க பயன்படுத்தும் உலோக நானையங்களும், காகித நோட்டுகளும் செலாவணி என்று அழைக்கப்படுகிறது. வர்த்தகத் துறையின் அஸ்திவாரமே இந்த செலாவணி தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு காலத்தில் மனிதர்கள் தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்குவதற்கு தானியங்களையும் காய்கறிகளையும் பண்ட மாற்றாகக் கொடுத்து வாங்கி வந்தனர். ஆனால் காய்கறிகளும் தானியங்களும் நீண்ட நாட்களுக்கு தாக்குப் பிடிக்காமல் போகவே வேறு வழியின்று தங்கம் மற்றும் பல உலோகங்களான கட்டிகளைக் கொடுத்துதான். தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கிவந்தனர்

தொடக்கத்தில் பொருட்களையோ சேவைகளையோ பெறும் போது அனைத்துவித பொருட்களும் பரிமாற்றப்பட்டாலும் பின்னர், உப்பு, சிப்பி போன்ற சில குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே பரிமாற்ற அலகுப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் சேமிப்புப் பெருமதி ஒன்று பணத்துக்கு வந்தது. இது வணிகத்தின் வளர்ச்சிக்கும் வணிகர்கள் என்ற புது சமுதாய வகுப்பையும் உருவாக்கியது. இந்த உலோக பரிமாற்றத்திலும் பல பிரச்சனைகள் உருவாகத் தொடங்கியது . அது என்னவென்றால் தங்கம் போன்ற உலோகங்கள் சுத்தமானதா இல்லையா என்பதை அறிந்துகொள்வதற்கு பயன்படுத்தப் படும் உரசிப் பார்க்கும் முறை மிகவும் கடினமாகத் தோன்றியது அனைவருக்கும் . இவ்வளவு வளச்சிகள் பெற்றப் பிறகும் இன்னும் பல கிராமங்களில் தானியங்கள் காய்கறிகளைக் கொடுத்து பொருட்கள் வாங்கும் முறை வழக்கில் இருந்துதான் வருகிறது என்பது மட்டும் திண்ணம்.

கி.மு 700. ம் ஆண்டு லிடியா நாட்டு மன்னன் கயிஜாஸ் என்பவர் எலேக்டிரம் என்னும் நாணயத்தை அறிமுகப்படுத்தினார். 25 சதவீதம் வெள்ளியும், 75 சதவீதம் தங்கமும் கலந்து இதை உருவாக்கினார். இந்த நாணயம் அவரை விதையின் உருவத்தில் இருந்தது. கொடுக்கல் வாங்கலில் இந்த நாணயம் நீண்ட நாட்கள் அதிக வசதியை ஏற்படுத்தியது. கிரேக்க வர்த்தகர்கள் இதன் வசதியை உணர்ந்து இந்த நானையத்தை பயன்படுத்தத் தொடங்கினர் . இதில் இருந்து மிகக் குறுகிய காலத்திலயே பல நாடுகளுக்கும் நாணய செலாவணி முறை பரவத் தொடங்கியது. நாட்கள் செல்ல செல்ல தங்கத்துக்கு பதிலாக செம்பு பயன்படுத்தத் தொடங்கினார்கள். வியாபாரத்தில் அதிக அளவில் நாணயங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்த போதும். அதிக அளவிலான நானையன்களை தூக்கி செல்வதில் சிரமங்கள் இருந்தது . அதன்பிறகுதான் இதை சரி செய்யும் ஒரு முயற்சியாக முதன் முதலில் காகிதத்தில் அச்சடிக்கும் நோட்டு முறையை கொண்டு வந்தனர். இதில் சீனர்கள்தான் முதன் முதலில் காகித செலாவணி முறையை பணமாக கொண்டுவந்தார்கள் என்று சொல்லவேண்டும்.

கி மு 119 ம் ஆண்டிலியே காகித நோட்டுக்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் சீனர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாணயம் மிக்க ஒரு வங்கி காகிதத்தில் அச்சடித்துள்ள தொகையை தருவதாக அளிக்கும் உறுதி மொழியை அடிப்படையாகக் கொண்டுதான் காகித நோட்டு பணம் புழக்கத்திற்கு வந்தது . கி.பி 1661 ம் ஆண்டு ஜூலை மாதம் சுவீடன் நாட்டில் ஸ்டாக் ஹோமில் உள்ள ஒரு வங்கிதான் உலகத்திலியே முதன் முதலில் அனைவரும் ஏற்றுகொள்ளும் வகையில் காகிதத்தில் அச்சிட்டு பணம் என்று வெளியிட்டது என்றால் பார்த்துகொள்ளுங்கள். இன்று காகித நோட்டுக்கள் வளர்ச்சி அடைந்து காசோலைகள், கடன் அட்டைகள் என்று பல்வேறு வடிவில் உருமாற்றம் பெற்று இன்று உலகமெங்கும் கை மாறத் தொடங்கிவிட்டது. ”கைக்கு கை மாறும் பணமே உன்னைக் கைப் பற்ற நினைக்கிறது மனமே” என்று.

Thursday, 29 August 2013

ஒரு டாலருக்கு.....ரூ 68


நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து

ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்


நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.

சுதேசி சிந்தனைகள்.......

டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய தினம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது. அதாவது ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 68.xx.

இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி:

இன்னும் ஒரே வாரத்தில் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயரலாம். தினசரி உபயோகிக்கும் அந்நிய நாட்டுப் பொருட்கள் விலை ஏறலாம். (அவ்வாறு ஏறாவிட்டால் அவர்களின் இலாபம் எத்தனை என்பதை எண்ணிப் பார்க்கலாம்). மோட்டார் வாகன உதிரிபாகங்களின் விலை ஏறும். அதே நேரம், ஏற்றுமதியாளர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு. தங்களுக்கு கிடைக்கும் டாலர் ஆர்டர்கள். அரசாங்கத்தின் புண்ணியத்தில், தானாகவே கிடைக்கும் 10% அதிக லாபம்.

புதிய ஏற்றுமதி ஆர்டகளை விலை குறைத்து எடுக்கலாம். இதனால் வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியக் கம்பெனிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவார்கள். இது ஒன்றும் கட்டுப்படுத்த முடியாத விஷயம் அல்ல. அரசாங்கம் ஒரு மாத காலத்திற்கு கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்தால், விரைவில் நிலைமை சரியாகி விடும்.

தங்க இறக்குமதியை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். மிகப் பெரிய அளவில் அந்நிய செலாவணியாக டாலர் வீணாவது இதில் தான்.
உள்நாட்டில் மக்களை பெட்ரோல் மற்றும் டீசலை குறைத்து உபயோகிக்கும் முறைகளை அறிமுகப்படுத்தலாம். பூலிங் எனப்படும் கூட்டுப் பிரயாண முறை, ஒற்றைப் படை எண் மற்றும் இரட்டைப் படை எண் கொண்ட வண்டிகளை சுழற்சி முறையில் சாலையில் ஓட விடலாம்.

வாரம் ஒரு முறை அனைவரும் தமது சொந்தப் பிரயாணங்களை பொதுத்துறை வண்டிகளில் பிரயாணிக்க நிர்ப்பந்திக்கலாம். வாரம் இரண்டு நாள் நகைக் கடைகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கலாம். ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டைப் போன்ற யுனிக் அடையாள அட்டை கொண்டு பெட்ரோல், தங்கம், மற்றும் இறக்குமதி சார்ந்த பொருள்களுக்கு தனி மனித உச்ச வரம்பு கொண்டு வந்து, இறக்குமதியைக் கட்டுப்படுத்தலாம்.
ரூபாயின் டாலருக்கு எதிராக மதிப்பை அரசாங்கமே நிர்ணயித்து, அதற்கான விலையை நிலை நிறுத்தலாம்.

ரூபாய் டிவேல்யுவேஷன் எனும் பொருளாதார உத்தியை இதுவரை அரசாங்கம் கையாண்டதாகத் தெரியவில்லை. அதையும் முயற்சி செய்யலாம். FDI க்கான டிவிடெண்டுகள் மற்றும் வெளிநாட்டு பங்கீடுகளின் லாபங்களை ஆறு மாதம் கழித்தே இந்தியாவிலிருந்து வெளியே அனுப்ப தடை போடலாம். இதற்கெல்லாம் வெளிப்படையான உலக வர்த்தகம் மற்றும் திறந்து விடப்பட்ட சந்தைதான் காரணம். பின் விளைவுகளை ஆராயாமல் செய்யப்பட்ட முடிவுகளால் ஏற்படுகிறது. அதே நேரம் வெளிப்படையான மற்றும் சுதந்திரமாக திறந்து விடப்பட்ட சந்தைகளால் உண்டான இலாபம் மற்றும் பொருட்களால் நாள் நிறைய அனுபவிக்கப் பழகி விட்டோம்.

வெளிநாட்டுக் கார்கள், பெப்சி, கோலா, சீனப் பொருட்கள், கம்ப்யூடர், மடிக்கணினி, சோப்பு, என்று வரிசையாக நிறைய சொல்லலாம். இவைகள் இல்லாமல் நம்மால் வாழ முடியமா? இது தான் திறந்த வெளி சந்தையின் சோக முடிவு. பழக்கப்பட்ட பின் இவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது.

இந்த சந்தைகளால் அழிந்து கெட்ட நாடுகள், லெபனான் மற்றும் பிரேசில் . இதில் இரண்டாவது நாடு தங்களின் தொழில் புரட்சியால் முன்னேறி விட்டது. ஓரு டாலருக்கு நிகரான பிரேசில் ரியல் 2.17. லெபனான் மட்டுமே இன்னமும் அப்படியே இருக்கிறது. ஒரு டாலரின் மதிப்பு அங்கே 1511 லெபனான் லிரா. நாம் எவ்வளவோ பரவாயில்லை.

நம் நாட்டிற்கு இப்போது தேவை, நல்ல ஒரு நிதி அமைச்சர்.

சாதாரண ஒரு குடிமகனான எனக்கே இவ்வளவு விஷயம் தெரிகிறது என்றால் ஒரு கஜானாவை நிர்வகிக்கும் அமைச்சருக்கு எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்? பங்குச் சந்தையை மட்டும் அளவு கோலாக வைத்து செயல்படும் மத்திய நிதி அமைச்சருடைய அளவு கோலும் பீர்பாலுக்கு முகம் மழிக்கும் நாவிதனின் அளவுகோலும் ஒன்றாகவே இருக்கிறது என்பது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட ஒற்றுமையா?

நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.

சோப்பு என்றால் சந்திரிகா , சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பு என்றால் டாபர், குளிர் பானம் என்றால் இளநீர், மற்றும் சாத்துக்குடி ஜூஸ். இப்படி பல வழிகளில் நீங்களும் அந்நிய பொருள்களை சிறுக சிறுக நிராகரித்து, நாட்டு நலனில் அமைச்சரை விட அதிகமாக பங்கு கொள்ளலாம்.

இன்றைய நாளில் நீங்கள் உபயோகிக்கும் வெளிநாட்டுப் பொருள்களில் ஒன்றையேனும் தவித்து, ஒரே ஒரு டாலரை மிச்சப்படுத்துங்கள். ஒரு வேளை இந்தியர்கள் அனைவரும் ஒரு சேர அப்படியே செய்தால் ஒரே நாளில் நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.
— with Palaniyappan Nk and Ajay Arnold.

Monday, 19 August 2013

TET 2013 answer key

TET 2013 Paper I  tentative answer key...
Some New Answers Corrected & Added with Clarification. 
Sl.No
Subject
Question (or) Answer Keys
1Child Development and Pedagogy
(relevant to age group 6 – 11)
2Language I

Tamil/Telugu/Malayalam/Kannada/Urdu
3Language II - English
4Mathematics
5Environmental Studies

THANKS TO http://trbtnpsc.blogspot.in/

TET 18.8.2013 tentative answer key Paper II

Sl.No
Subject
Question (or) Answer Keys
1Child Development and Pedagogy
(relevant to age group 6 – 11)
2Language I

Tamil/Telugu/Malayalam/Kannada/Urdu
3Language II - English
4Mathematics & Science
5Social Science

Tuesday, 30 July 2013

கைக்கோளர்...


மிழ்நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூலின்றித் திண்டாடும் கைக்கோளர் வகுப்பார் சோழப்பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற வீர வகுப்பாயிருந்தனர். அவர்களில் பொறுக்கி எடுத்த வீரர்களைக் கொண்டு சோழசக்கரவர்த்திகள் அகப்பரிவாரப்படையை அமைத்துக்கொள்வது வழக்கம்.அப்படி பொறுக்கி எடுக்கப்பட்ட படைக்கு தெரிஞ்ச கைக்கோளர் படை என்ற பெயர் வழங்கியது.

கல்கி பொன்னியின் செல்வன் பாகம் 2 லிருந்து பெறப்பட்டது..

கொங்குப் பகுதியில் புழங்கும் சில சொற்கள்

(அகரவரிசையில்)

அக்கட்ட, அக்கட்டு. அக்கட்டாலே - அந்த இடம், அந்த இடத்திலே. (நீ அக்கட்டாலே போய் உட்காரு)
அந்திக்கு- இரவுக்கு
அங்கராக்கு - சட்டை
அட்டாரி, அட்டாலி - பரண்
அப்பச்சி , அப்புச்சி- தாய்வழித் தாத்தா
அப்பத்தா- தந்தைவழித் பாட்டி (அப்பாவின் ஆத்தாள்)
அப்பு - அறை. (அவளை ஓங்கி ஒரு அப்பு அப்படா, செவுனி திரும்புகிறாற்போலே)
அம்மாயி - அம்மாவின் அம்மா
ஆகாவழி- ஒன்றுக்கும் உதவாதவன்
ஆட்டம் - போல என்று பொருள்படும் ஒரு சொல்: (அக்காளாட்டம் சும்மா இரு - அக்காளைப் போல் சும்மா இரு)
ஆயா - அப்பாவின் அம்மா
ஆம்பாடு - காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி)
இக்கிட்டு - இடர்பாடு
இட்டேறி - தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)
இண்டம் பிடித்தவன் - கஞ்சன்
உண்டி - (sample) = உண்ணும் பதம்? - தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்
உப்புசம் , உக்கரம் - புழுக்கம்
ஊக்காலி (?ஊர்க்காலி)- பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். ( ரவுடி )
ஊளைமூக்கு - சளி நிரம்பிய மூக்கு
எச்சு - அதிகம்.
எகத்தாளம் - நக்கல், பரிகாசம்
எரவாரம்-கூரைக்கு கீழ் உள்ள இடம்
ஏகமாக - மிகுதியாக,பரவலாக
ஒட்டுக்கா - ஒரேயடியாக, இணைந்து (இரண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாருங்கள் - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)
ஒடக்கான் - ஓணான்
ஒப்பிட்டு, ஒப்புட்டு - போளி
ஒளப்பிரி - உளறு "இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்"
ஒறம்பற - உறவினர் (உறவின்மு்றை) - விருந்தினர்
ஓரியாட்டம் -சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.
ஒருசந்தி - ஒரு வேளை மட்டும் விரதம் இருத்தல்
கட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்
கட்டிச்சோற்று விருந்து - கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு
கடைகால், கடக்கால் - அடித்தளம்
கடகோடு - கடைசி ( கோட்டுக்கடை - கடைசிக்கடை, அந்த கோட்டிலே பாரு - அந்த கடைசியிலே பாரு)
கடையாணி - அச்சாணி
கரடு - சிறு குன்று
கல்யாணம் (கண்ணாலம்) - திருமணம்
காராட்டு காலம் - இனப்பெருக்க காலம் (காராட்டு காலத்தில் திரியும் பூனை ஒரு மாதிரி மதத்துடன் இருப்பதால் அதற்கு காராட்டுப் பூனை என்று பெயர்)
குக்கு - உட்கார்
கூம்பு - கார்த்திகை தீபம் ( கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு )
கூதல்- குளிர், கூதகாலம்- குளிர்காலம்
கொரவளை \ தொண்டை -குரல்வளை
கொழுந்தனார்- கணவரின் தம்பி
கோடு - "அந்தக் கோட்டிலே உட்கார்", பழைமைச்சான்று: "கோடுயர் அடுப்பு" - "பக்கம் உயர்ந்த அடுப்பு" (புறநானூறு 164)
சாடை பேசுகிறான் - குறிப்பாகத் (மறைமுகமாகத்) தாக்கிப் பேசுகிறான்
சாங்கியம் - சடங்கு
சிலுவாடு - சிறு சேமிப்பு
சீரழி - நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)
சீராட்டு - கோபம். (கட்டிக் கொடுத்து மூன்றுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீராடிட்டு வந்துவிட்டது)
சுல்லான் (சுள்ளான்?) - கொசு
செகுனி, செவுனி - தாடை/கன்னம்
செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி
சோங்கு - சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி
சேந்துதல் - தண்ணீர் இறைப்பது (கிணற்றிலே இருந்து தண்ணீர் சேந்தி வா = தண்ணீர் இறைத்துக்கொண்டு வா )
தாரை - பாதை
தொண்டுபட்டி - மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் - ஆட்டைத் தொண்டுபட்டியிலே அடை
துழாவு - தேடு
திரட்டி (திரட்டு) - பெண்ணின் முதிர்ச்சி விழா, பூப்பு நன்னீராட்டு விழா
நங்கை, நங்கையாள் - அண்ணி நாத்தனார்
நலுங்கு - உடல் நலம் குன்றிய ( குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லைச் சொல்ல மாட்டார்கள் - அவர்கள் குழந்தை நலுங்கிவிட்டதாம்)
நசியம் - மாடுகள் சினையாகும் பருவம்
நியாயம் (நாயம்) - பேச்சு ( அவன் பேச்சு யாருக்கு வேணும் - அவன் நியாயம் யாருக்கு வேணும், அங்கே என்னடா பேச்சு - அங்கே என்னடா நாயம் )
நீசதண்ணி- பழையசோற்றுத்தண்ணி
நோக்காடு - நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்றைக்கு வரக் காணோம்.
நோன்பு (நோம்பி) - திருவிழா
பகவதியாயி நோன்பு (பவுதியாயி நோம்பி) - பகவதி அம்மன் திருவிழா
படு - குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை
பழமை - பேச்சு ( அங்கே என்ன பேச்சு - அங்கே என்ன பழமை )
பாலி - குளத்தை விடச் சிறிய நீர்நிலை.
பிரி - பெருகு, கொழு ("பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்")
வட்டல் -தட்டு
புண்ணியாசனை - (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா
பெருக்கான் - பெருச்சாளி
பொக்கென்று - வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)
பொட்டாட்டம் - அமைதியாக
பொடக்காலி - புழக்கடை
பொடனி, பொடனை - (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து
பொழுதோட- மாலைநேரம்
பொறந்தவன் - உடன் பிறந்த சகோதரர்
பொறந்தவள் - உடன் பிறந்த சகோதரரி
மச்சாண்டார் - கணவனின் அண்ணன்
கொழுந்தியாள் - கணவனின் தங்கை
மலங்காடு - மலைக்காடு
மசையன் - விவரமற்றவன்
மழைக்காயிதம் - பாலிதீன் காகிதம்
மளார் - விரைவாக, சீக்கிரம் (மளார் என்று தனியாக சொல்லமாட்டார்கள். மளாரென்று வா\போ, மளாரென்று வேலையை முடி என்று அடுத்த சொல்லோடு இணைந்து தான் இச்சொல் வரும்)
முக்கு - முனை, முச்சூடும்- முழுவதும்,. மூலை, வளைவு
வெகு - அதிக
வேளாண்மை (வெள்ளாமை) - உழவு, விவசாயம்
வேசகாலம்- வெய்யில்காலம்
வேகு வேகுன்னு- அவசரஅவசரமாய்
சீக்கு - நோய்
பன்னாடி - கணவன், முதலாளி (பண்ணைக்கு சொந்தக்காரன்)
முட்டுவழி - முதலீடு
கொழு -ஏர்மனை
கொடாப்பு ‍- கோழிகளை அடைத்து வைக்கப் பயன்படும் பெரிய கூடை (தென் மாநிலங்களில் பஞ்சாரம் என்று சொல்லப்படும்)
ரக்கிரி -கீரை

உக்காரு - உட்கார்


வழி= இமையவர்மன் இனியராஜா (facebook)