வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Monday, 1 April 2013

ஏன் மாற வேண்டும் இயற்கை விவசாயத்திற்கு?

பரிணாம வளர்ச்சி பெற்ற ஆதி மனிதன் காடுகளில் அலைந்து திரிந்து உணவு சேகரித்தான்.தீயின் பயன்பாட்டை கண்டுபிடித்த பின்னர்,அவன் பக்குவப்படுத்தப்பட்ட உணவை உண்ண தொடங்கினான்.தனக்கு வேண்டிய உணவை தானே பயிரிட்டு கொள்ள,குழுவாக இனைந்து செழுமையான நதியோரங்களை தனக்குரியதாக ஆக்கி கொண்டான்.இப்படிதான் நாகரீகம் மேம்பட்டது.விவசாயம் மனிதனின் முதல் தொழில் ஆனது.ஆதியிலிருந்த மனிதன் இயற்கையோடு இணைந்து பயிர் செய்தான்.இயற்கை தனக்களித்ததை பயன்படுத்தி கொண்டு அதற்கே திருப்பி அளித்தான்.



இந்தியாவில் விவசாயம் :


என்ன இல்லை இந்த திருநாட்டில் ? என்று எல்லோரும் புகழும் பெருமையை பெற்றது நம் இந்திய வள நாடு.சரித்திரத்தின் பெரும் தேடல்கள் எல்லாம் இந்தியாவின் செல்வத்தை நோக்கியே தொடங்கப்பட்டுள்ளது.பண்டைய தமிழக மக்கள் நிலத்தின் பயன்பாடு கருதி அவற்றை குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல்,பாலை என்று பிரித்துள்ளனர்.வயலும் வயல் சார்ந்த பகுதிகளையும் உடையது மருத நிலம்.மாடு செல்வமாக கருதப்பட்டுள்ளது.ஆவும் மாந்தரும் இணைந்தே வாழ்தனர்.மனிதன் கால்நடை கழிவுகளில் இருந்து பயிர் செழித்து வளர்வதை கண்டுகொண்டான்.எனவே கால்நடையின் கழிவுகளை நிலத்திற்கும் அதன் ஏனைய பயன்பாடுகளை தனக்கும் உபயோகித்துகொண்டான்.இயன்றவரை இயற்கை அன்னையின் கட்டுப்பாடுக்குள் தன் செயல்களை வரையறுத்து கொண்டான்.


பசுமை புரட்சியும் அதன் விளைவுகளும் :

காலங்கள் மாறின.நம் நாடு அன்னியருக்கு அடிமைபட்டது.இந்தியாவின் அபரிதமான செல்வத்தை அபகரித்தனர் அன்னியர்.1829 இல் தஞ்சையை பார்வையிட்ட ஒரு ஆங்கிலேயன் சொன்னான் "எனது அனுபவத்தில் நான் தஞ்சையின் சிறந்த வண்டல் மண் சமமாக எதையும் பார்த்ததில்லை.அது, மற்ற நிலங்களிலும் இரண்டு பெரிய நன்மைகளை கொண்டுள்ளது.அதற்கு அவர்கள் உரமிடுதல் தேவையில்லை மற்றும் அந்த நிலம் எக்காலமும் பாழ்படமுடியாது"
நெடிய போராட்டத்தின் இறுதியில் நாம் சுதந்திரம் அடைந்தோம்.உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காக 1960 களில் "பசுமை புரட்சி " கொண்டு வரப்பட்டது.இதை சாக்கிட்டு கொண்டு மற்ற நாடுகளின் கழிவுகளை நம் தலையில் கட்ட தொடங்கினார்கள்.இரண்டாம் உலக யுத்தத்தில் மிஞ்சிய அமிலங்களை உரம் என்ற பெயரில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்தார்கள்.அதிக விளைச்சலுக்கு செயற்கை உரத்தை மண்ணில் கொட்டினோம்.பயிர் விளைந்தது.அபரீதமாக தேவைக்கதிகமாக விளைந்தது.ஆனால் விஷமாக விளைந்தது.விவசாயி காலம்காலமாக சேர்த்து வைத்த விதைநெல் அவன் கையிலிருந்து ஒரு அயல் நாடு கம்பேனிக்கு கைமாறியது.அந்நியன் நம் நாட்டின் சூழலுக்கு சற்றும் பொருந்தாத மரபணு மாற்றப்பட்ட விதைகளை எல்லாம் நம்மிடம் கொடுத்து சோதித்தான்.விளைவு ,பொருந்தா விவசாய முறையால் நிலம் பாழ் ஆனது.விளைச்சல் குறைய தொடங்கியது.மண்ணை நம்பி வாழ்ந்த விவசாயி தோல்வி அடைந்தான்.வளம் இழந்த மண்ணோடும்,மண்ணுக்கு பொருந்தாத விதைகளோடும் போரிட்டு தன்னுயிரை இழந்தான்.



நம் நாட்டு சுழலுக்கு ஏற்ப வளரும் மரபு பயிர் வகைகளை நாம் இழந்து வருகிறோம்.மண்ணுக்கும்,மனிதருக்கும் தீங்கு விளைவிக்காத இயற்கை விவசாய முறைகளை நாம் மறந்து வருகிறோம்.ஆனாலும் காலம் கடக்க வில்லை.மனிதரின் பெரும் பிழைகளை இயற்கை அன்னை மன்னிப்பதற்கு,எஞ்சி இருக்கும் நிலங்களை காக்க தொடங்குவோம்.பாழ் நிலத்தையும் பசுமையாக்கும் இயற்கை விவசாயத்திற்கு மாறுவோம்.பெரும் விளைவுகள் சிறு மாற்றங்களில் தான் தொடங்குகிறது.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்.....

Thursday, 7 March 2013

உலர் திராட்சை


செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் காணப்படுகின்றன. நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக்கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது.

உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.

அடங்கியுள்ள சத்துக்கள்:

உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தசோகையை கட்டுப்படுத்தும்:

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

காமாலை நோய் குணமடையும்:

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.

உடல்புஷ்டிக்கு:

இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.

தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும்முன் 20 பழங்களை சுத்தம்செய்து பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும்.

மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும்.

பெண்கள் நோய் தீரும்:

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீ­ரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஆழாக்கு தண்ணீ­ரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வந்தால் வலி குணமடையும்

Sunday, 20 January 2013

உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?




இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டுநண்பர்களுடன் பகிரவும். நன்றி.

1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்
நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம்
இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட
வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000
ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப
கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள்
நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம்
அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள்
தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய்
பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்.
இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில்
கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.

2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி
மற்றும்கல்லூரி) யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை:

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க
முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை
அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர்
அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

3.ரேஷன் கார்டு! யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட
வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:

சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன
விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள்
வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர
வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது
குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

4.டிரைவிங் லைசென்ஸ்! யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை:

விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம்
FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு
மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்.

5.பான் கார்டு!யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட
ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை:

பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில்
தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு
விண்ணப்பிக்க வேண்டும்.

6.பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல்
அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்?

தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை:

முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம்
எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில்
புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

7.கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்?

ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20
ரூபாய்.

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

8.டெபிட் கார்டு!யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை:

வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை:

டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி
வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல்
தெரிவித்து, அதன் மூலம் மோசடியான
பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி
புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

9 மனைப் பட்டா! யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர்
பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

9.பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.

கால வரையறை:

இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40
நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக
காலம் எடுக்கும்.

நடைமுறை:

பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்
துறையில் புகார் அளித்து கண்டு பிடிக்கப்படவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக்
ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

10.கிரெடிட் கார்டு!

கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.

யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான
விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை:

15 வேலை நாட்கள்.

நடைமுறை :

தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்
சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

Courtesy :விகடன்

Sunday, 13 January 2013

வாழ்த்துக்கள்...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....!!!

Wednesday, 9 January 2013

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில்


தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.


இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்...

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்

1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்

13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
— with Vinothpraveen Devadoss and Hari Iyer.

Thursday, 20 December 2012

நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்கள்!

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"

இருளும் ஒளியும் சந்திக்கும் அதிகாலையில் விழிப்பு, தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி, கொஞ்சம் யோகாசனம், கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 75 வயதிலும் 25 வயது இளைஞர்போல் உற்சாகமாக உழைத்துவரும் நம்மாழ்வாரிடம் ஃபிட்னெஸ் ரகசியம் பேசலாமா... 



''எனது ஆரோக்கியத்துக்கான அடிப்படைக் காரணம் என்னுடைய வாழ்க்கைமுறை. இது கிராமத்து வாழ்க்கை கொடுத்த பரிசு. தோட்டத்தில், பண்ணையில், மேடையில் என்று எங்காவது ஓரிடத்தில் உழைத்துக்கொண்டே இருப்பேன். உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது.

தினமும் காலையில் கம்பு, தினை மாவு, கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து கஞ்சிவைத்துக் குடிக்கிறேன். இந்தக் கஞ்சி விஷம் இல்லாதது. அதாவது, ரசாயனம் இல்லாதது. கரும்புக்கு ரசாயனம் இடுவதால் வெல்லத்தில் ரசாயனம் இருக்கிறது. பனை மரத்தில் ஏறி நம் ஆட்கள் இன்னும் பூச்சி மருந்து அடிக்கவில்லை. அதனால்தான் பனை வெல்லம் சுத்தமான இயற்கை உணவாக இருக்கிறது.

பகல் வேளையில் ரசம் அல்லது மோர் மட்டுமே சேர்த்துக் கொஞ்சமாக சாதம் சாப்பிடுகிறேன். இடையில் காய்கறி ரசம். இரவில் இரண்டு அல்லது மூன்று இட்லி மட்டுமே ஆகாரம். பசிக்காவிட்டால் சாப்பிடுவது இல்லை. இதுதான் என்னுடைய சாப்பாட்டு அட்டவணை.

வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு விடுதிகளில் சாப்பிடுவது இல்லை. அதிகபட்சமாக நண்பர்களின் வீடுகளில் சாப்பிடுவேன். இல்லாவிட்டால் பழங்கள், கடலை மிட்டாய், பேரீச்சம்பழம் மட்டுமே என் உணவு. காபி, டீ சாப்பிடுவதைவிட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன.

ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் டன் அளவு பூச்சிக்கொல்லி நஞ்சுகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களையே இன்றைக்கு மக்கள் சாப்பிடுகிறார்கள். நோயோடு பலரும் வாழ்வதற்கு பூச்சிக்கொல்லி நஞ்சுகள் ஒரு முக்கியமான காரணம்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால், மனமும் நன்றாக இருக்கும். உடல், மன ஆரோக்கியத்துக்கு இயற்கை ஒரு பெரிய வரப்பிரசாதம். செடி ஒன்றை நட்டுவைத்து, அது வளர்வதையும் மொட்டுவிடுவதையும் காய்ப்பதையும் கவனித்துவந்தால், மனதுக்குள் குதூகலம் பிறக்கும். இதை ஒரு சிகிச்சைமுறையாகக்கூட மருத்துவர்கள் சொல்வார்கள். தாவரங்களிடமும் செல்லப் பிராணிகளிடமும் அன்பு செலுத்திப் பாருங்கள். அதன் மகத்துவம் புரியும்'' என்றவரின் பேச்சு மெள்ள இன்றைய இளைஞர்களின் புகை, மதுப் பழக்கம் நோக்கிச் சென்றது.

''மது, புகை வியாபாரிகள் தங்களது லாபத்துக்காக இளைஞர்கள் மீது இந்தப் பழக்கத்தைத் திணிக்கிறார்கள். வருங்காலத் தூண்களாக விளங்க வேண்டிய இளைஞர்கள், மது - புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி நுரையீரலையும் குடலையும் கெடுத்துச் சீரழிகிறார்கள். இதன் தொடர்ச்சியாகச் சமூகச் சிக்கல், பொருளாதாரச் சிக்கல், குடும்ப உறவில் சிக்கல் என்று எல்லாத் தரப்பிலும் பிரச்னைகள் குவிகின்றன. இதை அனைவரும் சேர்ந்து ஒருமித்துக் கண்டிக்க வேண்டும். 'உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தச் செயலையும் நாம் செய்யக் கூடாது’ என்ற உறுதியான சுயக் கட்டுப்பாடு ஒன்றே இதுபோன்ற தீய பழக்கங்களின் பிடியில் சிக்காமல் நம் சமூகத்தை காக்கும்.

'இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல்

நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய்’

- என்கிறார் வள்ளுவர்.

அளவறிந்து அமைதியாய் சாப்பிட்டால் ஆரோக்கியம் நம் பக்கம் நிற்கும். இல்லாவிட்டால் வள்ளுவர் சொல்வதுபோல் நோய்தான் நம் பக்கம் நிற்கும். இன்றைய இளைய தலைமுறையினருக்குச் சாப்பிடக்கூட நேரம் இல்லை. அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓடுவது நிறைய வியாதிகள் வருவதற்குக் காரணமாகிவிடுகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக அதில் கலக்கும் ரசாயனங்கள் நம் வயிற்றுக்குள் சென்றும் அதே வீரியத்தோடுதான் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பசித்தால் மட்டுமே உணவு, அதுவும் இயற்கை உணவு; அதையும் கொஞ்சம் கொஞ்சமாக உமிழ்நீரோடு சேர்த்து ரசித்து மென்று சாப்பிட்டால் எப்படி வரும் வியாதி? எல்லாமே கலைதான்!

நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.

எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு. நான் நாள் தவறாமல் யோகாசனம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றைச் செய்கிறேன். முதுகெலும்பை நேராக வைத்திருக்கும் வஜ்ராசனமும் செய்வேன். இவைதான் என் ஆரோக்கிய ரகசியம்'' என்று தனது வெண்தாடியை நீவியபடி பளிச்செனச் சிரிக்கிறார்
பசுமை நாயகன்!
........இயற்கை ஞானி நம்மாழ்வார்
இடம் :
வானகம்,
பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவு பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நிறுவனம்,
கடவூர், கரூர் மாவட்டம்.
கைபேசி : 94880 55546

Saturday, 8 December 2012

தமிழன் ஒரு தீர்க்க தரிசி...

சித்தர்களை கடவுளின் சீடராகவும்.. சித்தர் பாடல்களை கடவுளை தொழும் பாடலாகவும் நினைக்காமல் சிறிதளவு அறிவியல் கண்ணோடு பார்த்தால் தான் தெரியும் சித்தர்கள்தான் இந்த உலகின் இதுவரையில் யாராலும் தொடமுடியாத அளவில் அனைத்தையும் ஆராய்ந்த ஆய்வாளர்கள்.... மிக பழைய ஆராச்சியாலர்கள் என்று...
அதற்கு ஓர் உதாரணம்...
இன்று உலகம் தேடிகொண்டிருக்கும் ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அறிய உண்மையை நாம் காண இருக்கிறோம் அதற்கு முதலில்

பல ஆயிரம் ஆண்டு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பு இங்கே பார்போம்

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-திருமூலர்

இவர் இங்கு குறிபிட்டுருப்பது சிவனுடைய வடிவை சொல்லவேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து அதை நூறாக கூறிட்டு பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாக பிரித்து அதில் ஒன்றை நான்கயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.

இப்பொழுது நாம் இதை அறிவோம் ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு

0 .000000212 mm - ஹைட்ரோஜென்

சரி இப்பொழுது நாம் அவர் கூற்று படி கணக்கிட்டு பார்போம், ஒரு மனிதனின் முடியானது 30 -80 மைக்ரோன் (micron) அக உள்ளது, எனவே நாம் 50 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்

மயிரின் சுற்றளவு = 50 மைக்ரோன்
(size of an hair = 50 micron )

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
(100 micron = 0.1 millimeter)

50 மைக்ரோன் = 0.05 மில்லிமீட்டர்

இப்பொழுது அவர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்

0.05/100 = 0.0005 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்

0.0005/1000 = 0.0000005 மில்லிமீட்டர் (MM)
இப்பொழுது நமக்கு கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தில் வகுத்தால் நான் சிவனின் வுருவத்தின் அளவை காணலாம் என்கிறார் திருமூலர்

0.0000005/4000 = 0.000000000125 மில்லிமீட்டர் (MM)

அகவே இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிபிடுவது சரசெரியாக 0 .000000000125 மில்லிமீட்டர் (MM) இப்பொழுது இந்த கடவுள் என கருதப்படும் அளவானது நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்க பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளானது. சரி அதை விட சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா ... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள் . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாக செயல் படவில்லை அதற்கு உல் அணு ஒன்று உள்ளது அது தான் காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை . அறியபட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்
ஹிக்க்ஸ் போசோன் உருவம் என்ன??

என் ஆராய்ச்சியின் அடுத்தகட்டமாக சிவனின் அளவை சொன்ன திருமூலர் சிவனின் வுருவதை சொல்லாமலா இருந்திருப்பார்??

அவ்வளவு சிறிய சிவனின் உருவம் எப்படி இருக்கும் என்று நமக்குள் ஒரு ஆர்வம் உண்டாகிறது அல்லவா, இதோ அவனின் உருவ அழகை சொல்லும் திருமூலரின் வார்த்தைகள்

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே
-திருமூலர்

இதில் அவர் கூறியிருப்பது என்னவெனில் அனைத்திலும் கலந்தும் கலக்காமல் இருப்பவன், கண்ணனுக்கு தெரியாதவன் பரந்த சடையுடையவன் பசும்போன்னிரத்தில் இருப்பவன் , நினைபவர்கேல்லாம் கிடைக்காதவன் , அனைவரயும் மயக்கும் வெண்ணிலவானவானே. இது தான் அவர் சிவனின் வுருவாக சொல்கிறார்.

இதில் இப்பொழுது நாம் சில வரிகளை மீண்டும் ஆராய்ந்து பாப்போம்...

பொதுவாக சிவ பெருமானை நாம் சடாமுடியன் , சடையான் , என்று கூறுவோம் , அதே போல் அவரும் பரந்த சடையுடையவானே என்று கூறியிருக்கிறார், இப்பொழுது உங்கள் கண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சிடியுடன் நினைத்து கொள்ளுங்கள், நாம் பேச்சு வழக்கில் பரட்டை தலை என்று சொல்லுவோம் அல்லவா அதைபோன்று, அனால் சற்று பெரிய அளவில் .

பின்பு அந்த வுருவம் பொன்னிறத்தில் உள்ளது போல் நினைத்துகொள்ளுங்கள், இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம் வழக்கமாக காணும் சிவ பெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன் காட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த வுருவத்தை கண்ணுக்கு புலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள் . சாரா செரியாக ஒரு அனுவலவிற்கு

இப்பொழுது சொல்லுங்கள் ஹிக்க்ஸ் போசோன் சொல்லும் அந்த ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் எப்படி இருக்கும் என்று......!!
இணையதளத்திலும் தொலைகட்சிகளிலும் நாம் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதை கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டு முன்னரே.
தொடரும் என் ஆராய்ச்சி,

நன்றி
கி. கோகுல கிருட்டிணன்.

Tuesday, 4 December 2012

குங்குமப்பூ சாப்பிட்டா

குங்குமப்பூ சாப்பிட்டா குழந்தை சிவப்பாக பிறக்குமா?

இதோ ஒரு விழிப்புணர்வு ரிப்போர்ட் குங்குமப்பூ என்றாலே சட்டென்று ஞாபகத்துக்கு வருவது... ‘குழந்தை சிகப்பாக பிறப்பதற்காக சாப்பிடுவது‘ என்பதுதான். சரி... குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை நிஜமாகவே சிகப்பாக பிறக்குமா...? இதைப்பற்றி சந்தேகம் இருந்தாலும் கூட, மனைவி கர்ப்பமானவுடன் எல்லா கணவன்மார்களும் மறக்காமல் குங்குமப்பூ வாங்கி கொடுப்பார்கள். குங்குமப்பூ சாப்பிட்ட பலருக்கும் குழந்தை கறுப்பாகத்தான் பிறந்திருக்கிறது.

இதற்கு என்ன காரணம்... குங்குமப்பூ பற்றி நம்மிடம் அதிகளவு விழிப்புணர்வு இல்லாதது தான். தரமில்லாத குங்குமப்பூவை சாப்பிடுவதால் எந்த பிரயோஷனமும் இல்லாமல் போகிறது என்கிறார்கள் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள சரஸ்வதி ஸ்வேதா ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் இயக்குனர்கள் ரவிசங்கர் பாபு, டி.டி.சந்திரசேகர். இதோ அவர்களே விளக்கம் தருகிறார்கள்...

குங்குமப்பூ தாவரத்தின் பூவிலிருந்து சேகரிக்கப்படும் காம்புகளைத்தான் குங்குமப்பூ என்கிறோம். அக்டோபர், ஜனவரி மாதத்தில் மட்டுமே இந்த பூக்கள் பூக்கும். பூவை பறித்து காம்புகளை காய வைத்து குங்குமப்பூவை தயாரிப்பார்கள். 1 லட்சத்து 65 ஆயிரம் பூக்களில் இருந்து 1 கிலோ குங்குமப்பூ மட்டுமே சேகரிக்க முடியும்.

தரமான குங்குமப்பூவை அறுவடை செய்ய வேண்டுமெனில், 10 ஆண்டில் 6 ஆண்டு மட்டுமே நிலத்தில் பயிரிட வேண்டும். அப்போதுதான் தரமான குங்குமப்பூ கிடைக்கும். குங்குமப்பூவை தயாரிக்கவும், அதற்கான கால அவகாசமும் அதிகம் என்பதால் அவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது. சென்னையை பொறுத்த வரையில் இதன் விலை ரூ.30 முதல் ரூ.500 வரை உள்ளது. சிலர் சீப்பாக கிடைக்கிறது என்பதற்காக குறைந்த விலையில் கிடைக்கும் குங்குமப்பூ வாங்குகிறார்கள்.

இவற்றை சாப்பிடுவதால் உடம்புக்கு கெடுதல்தான் ஏற்படும். தரமான குங்குமப்பூ என்றால் அதன் காம்பில் 80 சதவீதம் சிவப்பாகவும், 20 சதவீதம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். தரமற்றது என்றால் 20 சதவீதம் மட்டுமே சிவப்பாக இருக்கும். சில வியாபாரிகள் விலையை குறைக்க வேண்டுமென்பதற்காக தரமற்ற குங்குமப்பூவில் டை அடித்து அதை சிவப்பாக்கி விற்பார்கள். தேங்காய் துருவல், மெல்லிய நூல் ஆகியவற்றிலும் டை அடித்து கலப்படம் செய்கிறார்கள். இதனால் மட்டுமே குறைவான விலைக்கு தர முடிகிறது.

பொதுவாக குங்குமப்பூ இந்தியாவில் காஷ்மீரிலும், ஸ்பெயின், ஈரான், கிரீஸ் நாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், ஸ்பெயினில் விளையும் குங்குமப்பூக்கள் தான் முழு தரமானவை. அங்கிருந்து இறக்குமதி செய்து தாஜ்மகால் என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்து வருகிறோம். எங்கள் பிராண்ட் உலகத்தரம் வாய்ந்ததென ஐஎஸ்ஓ 3632 சர்டிபிகேட் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்பற்றி மொத்த வியாபாரிகளிடம் விளக்கம் கொடுப்பதால் அவர்களும் மனம் மாறி சீப்பான குங்குமப்பூக்களுக்கு பதிலாக விலை கொஞ்சம் அதிகம் இருந்தாலும் எங்கள் பிராண்ட் குங்குமப்பூவை வாங்கி விற்கிறார்கள். சுமார் 500 கடைகளுக்கு நாங்கள் சப்ளை செய்கிறோம். குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிகப்பாக பிறக்குமா என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

அதேசமயம், குங்குமப்பூ சாப்பிட்ட கர்ப்பிணிகளுக்கு குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்று டாக்டர்களே சர்டிபிகேட் தருகிறார்கள். குங்குமப்பூவை பொடியாக்கி பாலில் கலந்து உடலில் தேய்த்தால் சிவப்பாகலாம். இதையே கர்ப்பிணிகள் சாப்பிடும் போது, கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு மசாஜ் செய்வது போலாகி குழந்தை சிவப்பாக பிறக்கிறது. தரமான குங்குமப்பூவால் மட்டுமே இது சாத்தியமாகும்.

எது ஒரிஜினல்

ஒரிஜினல்: சூடான தண்ணீரில் 4, 5 குங்குமப்பூவை போட்டால் பூ மெதுவாக கரைந்து மின்னக்கூடிய தங்க நிறத்தில் தண்ணீர் மாறும். நறுமணம் வீசும். 24 மணி நேரத்துக்கு பூவிலிருந்து நிறம் வந்து கொண்டிருக்கும்.
டூப்ளிகேட்: சூடான தண்ணீரில் பூவை போட்டவுடன், சிவப்பு நிறத்தில் தண்ணீர் மாறி விடும். நறுமணம் வீசாது. சிறிது நேரத்திலேயே பூவிலிருந்து நிறம் வருவது நின்று விடும்.


பேசியலுக்கு யூஸ் பண்ணலாம். குங்குமப்பூ துவர்ப்பு தன்மை கொண்டது. இது ஜீரணத்துக்கு நல்லது. சமைத்து முடித்ததும் அனைத்து உணவிலும் குங்குமப்பூவை கலக்கலாம். இதனால் நல்ல மணம் வீசும். உணவும் சுவையாக இருக்கும்.

ஜலதோஷம், இருமல், கேன்சர், பார்வை குறைபாடு, அதிக விந்து சுரத்தல் போன்ற பயன்கள் உண்டு. கர்ப்பணிகள் கருவுற்ற 5ம் மாதத்தில் இருந்து 9ம் மாதம் வரை சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமடையும். குழந்தை பிறந்த பிறகும் சாப்பிடலாம். இது ரத்த சோகை ஏற்படாமலும் தடுக்கும். நன்கு பசியை தூண்டும். ஆனாலும், குங்குமப்பூவை குறிப்பிட்ட அளவே உட்கொள்ள வேண்டும். அதிக அளவு சாப்பிடுவது தவறு.

குங்குமப்பூவை காய வைத்து பொடியாக்கி அதிலிருந்து தயாரிக்கப்பட்ட சிரப், பவுடர்களும் தாஜ்மகால் பிராண்டில் உள்ளன. ஒரு சொட்டு சிரப் ஒரு குங்குமப்பூக்கு சமமானது. இதை உணவில் கலக்கலாம். உடல் நலத்துக்கு நல்லது. பவுடரை பாலில் கலந்து பேசியலுக்கும் பயன்படுத்தலாம்.

Monday, 3 December 2012

மரக்கன்றுகள் நடுவோம் வாங்க!


3 மீட்டரிலிருந்து 4 மீட்டர் இடைவெளி தூரத்தில் 1 அடி விட்டம் 2 அடி ஆழத்திற்கு குழி எடுக்க வேண்டும். எடுத்த மண் குழிக்குள் சரியா வண்ணம் சற்றுத் தள்ளிப் போட வேண்டும்.
அந்த மண் சில நாட்களுக்கு அப்படியே வெளியில் இருக்கட்டும். அதில் உள்ள கற்களையும், கூழாங்கற்களையும் நீக்கி அதோடு 3-ல் 1 பங்கு மக்கிய சாணிஉரம் சேர்க்க வேண்டும்.

மரக்கன்று நடும் நாள்:
பருவ மழைக்காலத்தில் மழை பெய்யும் ஒரு நாளையோ அல்லது மேகமூட்டமான ஒரு நாளையோ தேர்ந்தெடுத்து முதல் மழைக்குப் பிறகு நடவு செய்வது நல்லது.

சரியாக நடுதல் எப்படி?
நாற்றுப் பண்ணைகளில் இருந்து நாற்றைக் கொண்டுவந்து சேகரிக்க வேண்டும். அப்போது நாற்றுக்களைக் கவனமாக கையாள வேண்டும்.
* தண்டைப் பிடித்து தூக்காமல் பையின் அடிப்பாகத்தைப் பிடித்து தூக்குவது நன்று.
* நட வேண்டிய இடத்துக்கு நாற்றுக்களை கொண்டு வந்த பிறகு நேரத்தை வீணாக்க வேண்டாம்.
* வெளியில் இருக்கும் மண்ணில் சிறிதளவு குழிக்குள் தள்ள வேண்டும்.
* வேர்களை சுற்றியிருக்கும் மண்பிடிப்பு உதிர்ந்து விடாமல் பாலிதின் பைகளைக் கிழித்தோ அல்லது மண் தொட்டிகளை உடைத்தோ குழியில் வைக்க வேண்டும்.
* மீதமுள்ள மண்ணைக் குழிக்குள் போட்டுத் தள்ளி வேரைச் சுற்றி மண்ணை இறக்கவும். இதனால் நாற்று வளையாமல் நேராக நிமர்ந்து வளரும். மழைத் தண்ணீரும் அதிகம் தேங்காது.
* தண்ணீர் விடத்தோதாக கன்றைச் சுற்றி பள்ளம் இருந்தால் நன்று. சரிவான பகுதி எனில் மழை நீர் சேகரிப்பு குழிகளை பிறை வடிவில் கன்றுக்கு முன்பும் பின்பும் ஏற்படுத்தலாம்.
கவனம்:
* ஈர மண்ணில் செடியின் வேர்கள் அழுந்திப் பொருந்தியிருக்க வேண்டும்.
* ஈர மண்ணில் இருந்து வேர்கள் வெளியே தெரிந்தாலும், வேரைச் சுற்றியிருக்கும் மண் உதிர்ந்தாலும் கன்றுகள் காய்ந்துவிடும் வாய்ப்பு உண்டு.
* நாற்றை அதிக ஆழத்தில் வைத்து நட்டாலும் அது காய்ந்து கருகி விடும் என்பது ஞாபகமிருக்கட்டும். வேர்கள் வெளியே தெரியும்பிட நீட்டிக் கொண்டிருந்தால் அந்த நாற்றுக்கள் வளராது.
* வேர்கள் மடங்கி இருக்கும் வகையில் நட்டு விட்டால் நாற்று வாடி உயிரிழந்து விடும்.
* வளைந்த நாற்றுக்கள் நேராக வளராது.
* முதல் கோடை காலத்தில் நாற்றுக்கு தினமும் தண்ணீர் விட வேண்டும். இல்லாவிட்டால் உயிரிழக்க வாய்ப்பு அதிகம்.
* நடப்பட்ட கன்றுகள் பாதுகாக்கப் பட வேண்டும். அதிக அளவில் பொது இடத்தில் மரக்கன்றுகளை வளர்க்க முற்படும்போது முடிந்தால் காவலர் ஒருவரை போட்டு கன்றுகளைப் பாதுகாக்க வேண்டும்
.
கடற்கரையோரம் மரம் நடும் முறை:
* செம்மண்/களிமண், வண்டல், எரு கொண்டு கலவை தயார் செய்ய வேண்டும்.
* மூடாக்கு செய்ய தென்னை நார்க் கழிவு, இலை தழைகளைச் சேகரிக்க வேண்டும்.
* 1.5 அடி X 1.5 அடி அளவு குழி எடுக்க வேண்டும்.
* அதில் பாதியில் தயாராயுள்ள கலவை மண்ணைப் போட்டு நட வேண்டும்.
* நட்ட பின் உப்பங்காற்றிலிருந்து கன்றுகளைக் காப்பாற்ற கிழக்கு மேற்காக இருபுறமும் பனை ஓலை வைக்க வேண்டும்.
ஆடு, மாடு மேய்ச்சலில் இருந்து காக்க உள்ளூரிலேயே கிடைக்கும் குச்சி கோல்களைச் செடியைச் சுற்றிலும் சொறுகி வேலி உருவாக்க வேண்டும்.
கடற்கரையோரம் செடிகளைக் காப் பாற்ற இரண்டு ஆண்டுகளுக்காவது தண்ணீர் விட வேண்டும்.
நாற்று நன்றாக வளரும்போது கண்ணுக்கு எத்தனை அழகாய் காட்சி தருகிறது. இன்றைய மரக்கன்று நாளைய மரம் நாட்டின் வளம். மரங்களை குழந்தைகளைப் போல் வளர்ப் போம்

Monday, 15 October 2012

கேட்டீங்களா..?


ரேஷன் கடையில் "ஸ்டாக் தீந்து போச்சு"ன்னு சொல்றாங்களா? இதோ நீங்கள் செய்யவேண்டியது! !!



உங்கள் ரேஷன் கடையில் ஏதோ ஒரு பொருளை நீங்கள் வாங்கச் செல்கிறீர்கள், ரேஷன் கடை ஊழியர் உங்களிடம் நீங்கள் கேட்கும் பொருளின் ஸ்டாக் இல்லை, தீந்து போச்சு, இன்னும் வரல்ல என்ற பதில்களை கூறுகிறார்களா? உண்மை நிலவரத்தை அறிய "உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை" ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்க மொபைல் போனை எடுங்க அதுல கீழ சொல்ற நம்பருக்கு கீழ வர்ற மாதிரி எஸ்.எம்.எஸ். அனுப்புங்க அவ்வளவுதான் மேட்டர் ஓவர்:

எஸ்.எம்.எஸ். அனுப்பவேண்டிய தொலைபேசி எண்: 9789006492, 9789005450, இந்த 2 நம்பர்ல ஏதாவது ஒரு நம்பருக்கு கீழ வர்ற மாதிரி எஸ்.எம்.எஸ். பண்ணுங்க:

[PDS] ஒரு ஸ்பேஸ் விடுங்க பிறகு [மாவட்டக்குறியீடு] அப்பறம் ஒரு ஸ்பேஸ் விடுங்க பிறகு [கடை எண்]. இதை டைப் செய்து அந்த தொலைபேசி எண்ணுக்கு அனுப்புங்க. மாலை 5 மணிக்குள்ள அனுப்பினீங்கன்னா உடனே பலன் கிடைக்கும்.

மாவட்ட எண், கடை எண் உங்கள் ரேஷன் கார்டிலேயே இருக்கும். (படத்தைப் பார்க்கவும்)
நன்றி https://www.facebook.com/TukkamVitraKacukal?ref=pb

Sunday, 23 September 2012

சீனா- தமிழில் கல்வெட்டு

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு


சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்

Monday, 10 September 2012

பறவைக்கும் குடி நீர்ப் பற்றாக் குறை!

பயிர் விளைச்சலை உயர்த்துவதற்காக ரசாயன உரம், ரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மதிப்புக் கூட்டு வரியைத் தள்ளுபடி செய்வதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.


பயிர் விளைச்சலுக்கு பெரிய முட்டுக் கட்டையாக இருப்பது தண்ணீர்ப் பற்றாக்குறை.

இயற்கை வேளாண்மையை செயல்படுத்தினால் தண்ணீர் தேவையும் குறையும். மின்சக்தி தேவையும் குறையும்.

வளர்ச்சி என்ற போர்வையில் தொழிற்சாலைக் கழிவுகள் ஆறு, குளம் போன்ற மேற்பரப்புநீரை மாசு படுத்துகின்றன.

சட்ட விரோதமான இச்செயலைத் தடுத்து நிறுத்துவதில் மக்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதன் மூலம் பயன்பாட்டுக்கான தண்ணீர் அளவை உயர்த்த முடியும்.

ஏரிகளில் சீமைக் கருவேல் வளர்ந்து, கிடைக்கும் சிறிதளவு மழை நீரையும் ஊறிஞ்சி ஆவியாக்குகிறது. சீமைக் கருவேல் மரங்களை அப்புறப்படுத்துவதன் மூலம் ஏரிகளை ஆழப்படுத்த முடியும் நீர் இருப்பைக் கூட்ட முடியும்

மன்னர்கள் வெட்டிய ஏரிகுளங்கள் பராமரிப்பு இன்மையால் மேடுபட்டுப் போய் தாம்பாளங்களாகக் காட்சி அளிக்கின்றன இவற்றை ஆழப்படுத்தி அள்ளப்படும் வண்டலை சிறு குறு உழவர்கள் நிலங்களில் பரப்பினால் மழை வரும்போது வயலில் ஈரப்பிடிப்பு கூடும். ஏரிகளின் கொள்ளளவு உயர்வதால் வெள்ளச் சேதம் தவிர்க்கப்படும். வேளாண் விளைச்சல் உயரும்.

அடிப்படைத் தேவையான தண்ணீர்த் தேவையை சீர் செய்யாமல் கம்பெனிகளுக்கு சலுகை செய்வதால் சிக்கல் தீராது. மூடிய குழாயில் சொட்டும் நீர் காக்கைக்குப் போதும். மனிதர்க்குப் போதாது.

Friday, 7 September 2012

நள்ளிரவில் சுதந்திரம் ஏன்?


மவுண்ட்பேட்டன் இந்தியாவிற்க்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்துவிட்டு இங்கிலாந்து பாராளமன்ற அனுமதியும் பெற்றுவிட்டார், இதனை பத்திரிகையாளர் மத்தியில் அறிவிக்கும் போது ஒரு நிருபர் என்ன தேதி (தினத்தில்) சுதந்திரம் கொடுக்க நினைத்துள்ளீர்கள் என்று கேட்டார். அதுவரை அது பற்றி யோசித்திராத மவுண்ட்பேட்டனின் மனதில் உடனடியாக வந்த தேதி ஆகஸ்ட் 15.
இரண்டாம் உலகப்போரில் ...
ஜப்பானை சேர்ந்த 1,50,000 வீரர்கள் கிழ்க்கு ஆசியா கடற்படை கமாண்டராக இருந்த மவுண்ட்பேட்டனிடம் 1945 ஆகஸ்ட் 15இல் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்) சரண்டைந்தனர். எனவே ஆகஸ்ட் 15 அவர் வாழ்நாளில் மறக்க முடியாது தேதி,
அதனால் ஆகஸ்ட் 15 இல் இந்தியாவிற்க்கும் சுதந்திரம் கொடுக்க முடிவு செய்தார்.
இவர் இதனை அறிவித்தவுடன் இந்தியாவிலுள்ள நம்மவர்கள் அந்த ஆகஸ்டு 15-ம் நாள் அஷ்டமி தினம் என்றும், அன்று நாடு சுதந்திரம் பெற்றால் நாடு நலம் பெறுமா எனவும் ஐயப்பாடு கொண்டனர். 17-ம் தேதி வேண்டுமானால் சுதந்திரம் பெறுவோம்; இவ்வளவு நாள்கள் பொறுத்தோம் இன்னும் இரண்டு நாள்கள் பொறுக்க முடியாதா என அங்கலாய்த்தனர்.
ஐவஹர்லால் நேருவிடம் இதுபற்றி முறையிட்டனர். அவருக்கு அஷ்டமி-நவமி இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கில அரசை அணுகினார். சட்டம் இயற்றியாகிவிட்டது. இனிமாற்ற முடியாது என்று ஆங்கில அரசு மறுத்துவிட்டது. நம்மவர்கள் தீவிரமாக யோசித்தனர்.
ஆங்கிலேயர்களுக்கு புதியநாள் அதாவது மறுநாள் என்பது நள்ளிரவு 12 மணிக்கே தொடங்கிவிடுகிறது. ஆனால் நமக்கோ விடியற்காலை ஐந்து மணிக்குத்தான் தொடங்குகிறது. எனவே நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினால் ஆங்கில அரசுக்கு அது 15-ம் தேதியாகவும் நம்மவர்களுக்கு முக்கிய நாளாகவும் இருப்பதால் அஷ்டமி-நவமி பிரச்னை இல்லாது போகும் என்று நினைத்தனர். இதனால் தான் சுதந்திரத்தை பகலில் பெறாமல் நள்ளிரவில் பெற்றோம்.

Tuesday, 4 September 2012

எத்தனை தமிழர்கள் இருக்கின்றார்கள்?

இ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?தமிழன்டா



நியூயார்க்: இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது.
இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் ‘இமெயில்' தான் என்று ஆகிவிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.
முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject:", "Bcc:", "Cc:", "Date:", "Body:"), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.
ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்' ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.ஏ. சிவா அய்யாதுரை 'இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில், நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாதுரை.
மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.
பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ‘இமெயில்' பயணத்தை http://www.inventorofemail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் அவமதிப்பு
இதே சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார். ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.


தமிழர்கள் தங்களை இந்தியர்கள் என்று நினைத்துக்கொள்வது ஒரு மாயை. அதிலிருந்து என்று வெளிவருகிறார்களோ அன்றுதான் அவர்களுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்கும்.

Share = Be a True Tamilan
Like = Proud to be a Tamilan
Comment = என்ன தவம் செய்தேனோ? தமிழனாய் பிறப்பதற்கு

Friday, 31 August 2012

உலகின் மூத்த குடி தமிழ் குடி.


உலகின் மூத்த குடி தமிழ் குடி.. அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.
தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.
தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.
1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.
இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.
1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.
இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். ”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.
மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.
மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.
1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.
மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.
அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.
ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.
ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். ”எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்” எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.
இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.
இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு. இவர்கள் என்ன செய்வார்கள் பாவம் ?,
1. 500 கோடி செலவு செய்து மாநாடு நடத்தி தீர்மானம் போடுவார்கள்
2. மாநாடு வெற்றிகரமாக நடந்ததிற்காக தனக்குத்தானே பாராட்டு விழா நடத்துவார்கள்.
3. தீர்மானத்தை எப்படி நிறைவேற்றுவது என்று அமைச்சரவை கூட்டம் நடத்துவார்கள்.
4. கூட்டத்தின் முடிவில் இதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவது என்று தீர்மானம் போடுவார்கள்.
5. இல்லை என்றால் கொடநாட்டிற்கு ஒய்வு எடுக்க செல்வார்கள்.
source : facebook

உடல் ஊனம் அல்ல! மன ஊனமே கொடியது!




“யுவராஜுக்கு புற்று நோய்? சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார். நோய் ஆரம்ப நிலையில் இருப்பதால் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள் நாட்டில் உள்ள பெருந்தலைகள் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் யுவராஜ் உடல் நலம் பெற்று நாடு திரும்ப வேண்டும் என வாழ்த்தினார்கள்”

இது அண்மையில் வந்த செய்தி. மனிதரைப் பாதிக்கும் கொடிய நோய்களில் ஒன்று புற்று. இதற்கு சரியான சிகிச்சை இதுவரை கண்டறியப்படவில்லை. புற்று நோயால் செத்துப் போனவர்களைவிடப் புற்று நோய்க்கான சிகிச்சையால் செத்துப் போனவர்களே அதிகம் என்று மணிப்பால் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூறியுள்ளார்.

புற்று நோயாளிகள் அனுபவிக்கும் மனவேதனையையும், உடல் வேதனையையும் சொல்லால் வருணிக்க முடியாது.என்று ஹர்மிளா குப்தா (டெல்லியில் சேவை மையம் வைத்திருப்பவர்) கூறுகிறார். தலைநகர் டெல்லியில் மட்டும் ஒரு லட்சம் புற்று ணோயாளிகள் உள்ளார்கள். ஆண்டுக்குப் பத்தாயிரம் பேர் புதிதாக்ப் புற்று நோய்க்கு ஆளாகிறார்கள் என்கிறார் ஹர்மிளா குப்தா. மேலும் இந்தியாவில் கருக்குழாய் புற்று நோயால் 7 நிமிடத்துக்கு ஒரு பெண் பலியாவதாக கூறுகிறது ஒரு புள்ளிவிவரம்.

புற்று நோய்க்கான காரணியை “கார்சினோஜென்” என்று அழைக்கிறார்கள். புகை இலை ஒரு கார்சினோஜென். புகையை உறிஞ்சி அடக்குவோர்க்கு நுரையீரல் புற்று நோய்; புகை இலையை மெல்வோர்க்கு வாயில் புற்று நோய்.; புற்று நோய் தடுப்பு பிரச்சாரம் செய்பவர்கள் பீடி, சிகரெட், புகை இலை தயாரிப்பைத்தடை செய்யாதது ஏனென்று புரியவில்லை.

புற்று நோயை உண்டு பண்ணக்கூடிய மற்றுமொரு ‘கார்சினோஜென்’ - பயிர் சாகுபடியில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் . பயிர்கள் அறுவடையாகும் போது எஞ்சிய நஞ்சாக தானியம், காய்கனி, முட்டை, பால், இறைச்சி அனைத்திலும் இவை காணப்படுகின்றன.

ஆண்டுதோறும் இவை நிலம், நீர், காற்று, செடிகளில் ஒரு லட்சம் டன் தெளிக்கப்படுன்றன. எண்டோசல்பான் என்ற கொடிய பூச்சிக்கொல்லி புற்று நோயை உண்டுபண்ணவல்லது என்று கண்டறிய 40 ஆண்டுகள் பிடித்தது. இன்று உச்ச நீதிமன்றம் அதை தடை செய்துள்ளது.

நன்மை செய்யும் பூச்சிகளையும் பறவைகளையும் அழித்து ஒழிக்கும் இரசாயன உப்புகளையும், பூச்சி கொல்லி நஞ்சுகளையும் “கார்சினோஜெனிக்” முத்திரை குத்தி தடை செய்ய பதவியில் உள்ளவர்களுக்கு மனமில்லை. அது குடிமக்களின் பொறுப்பு போலும்.

கொடியது உடல் ஊனம் அல்ல! மன ஊனமே

Friday, 17 August 2012

நாம் நம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை ...

* கடந்த, பத்தாயிரம் ஆண்டுகளில், எந்த நாட்டின் மீதும் இந்தியா போர் தொடுக்கவில்லை.


* கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, "பூஜ்ஜியத்தை' கண்டுபிடித்தது இந்தியா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர்.


* கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் தட்சசீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறுபதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன.


* கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளுக்கு முன், நாளந்தா பல்கலைக் கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும் வழிகாட்டியாக அமைந்தது.

* ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழியாக அமைந்தது, இந்திய மொழியான சமஸ்கிருதம். கம்ப்யூட்டர், "சாப்ட்வேர்' தயார் செய்ய மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம் தான் என, அமெரிக்கப் பத்திரிகையான, "போபர்ஸ், 1987 ஜூலை இதழில் குறிப்பிட்டுள்ளது.

* ஆயுர்வேதம் தான் மனித இனத்திற்கு ஆதியில் தெரிந்த மருத்துவ முறை. இதை, இந்தியாவின் சரகர் என்பவர்தான் கண்டு பிடித்து முறைப்படுத்தினார். இன்று, உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவ முறை புத்துயிர் பெற்று வளர்ந்து வருகிறது.

* பிரிட்டிஷ்காரர்கள் இங்கு ஊடுருவும் முன், இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடாகத் திகழ்ந்தது.

* "நாவிகேஷன்' - என ஆங்கிலத்தில் சொல்லப்படும், கப்பல் - படகு செலுத்தும் கலையை 6,000 ஆண்டுகளுக்கு முன், சிந்து நதியில் நிகழ்த்திக் காட்டியவர்கள் இந்தியர்களே. "நவ்காத்' எனும் சமஸ்கிருத சொல்லே ஆங்கிலத்தில், "நாவிகேஷன்' என்றானது. ஆங்கிலத்தில், "நேவி' என, கடற்படையைக் குறிக்கும் சொல், "நூவ்' என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே வந்தது.

* சூரியனை பூமி சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை, ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்து கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது, கி.பி, 5ம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் பட்டாச்சாரியர் கண்டுபிடித்து விட்டார். மிகச் சரியாக 365.258756484 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியர் கண்டுபிடித்தார்.

* கணித சாஸ்திரத்தில், "பை' என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் புதையனார் என்ற இந்தியரே. ஐரோப்பிய கணித மேதைகள், "பித்தகோரஸ் தேற்றத்'தை, விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது, 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.
* கணிதத்தில் அல்ஜிப்ரா, டிரிக்னாமெட்ரி, கால்குலஸ் ஆகியவை இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. குவாட்ராட்டிக் சமன்பாடுகள், ஸ்ரீதராச்சார்யா என்ற இந்தியரால், 11ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

* கம்பியில்லா தகவல் தொடர்பை, இந்தியாவின் ஜகதீஷ் போஸ் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார் - மார்கோனி (ரேடியோ கண்டுபிடித்தவர்) அல்ல என்று அமெரிக்க நிறுவனமான ஐ.இ.இ.இ., அடித்துக் கூறுகிறது.

* செஸ் விளையாட்டு, இந்தியாவிலேயே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரஞ்சா (சதுரங்கம்), அஷ்டபாதா என, இரு பெயரில் அழைக்கப்பட்டது.

* சிசேரியன், கேட்ராக்ட், செயற்கைக் கால், எலும்பு முறிவு, பித்தப்பைக் கல், மூளை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை, 2,600 வருடங்களுக்கு முன்பே, செய்து இருக்கிறார் சுஷ்ருதன் என்ற இந்தியர். அறுவை சிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்து சிகிச்சையையும் செய்து இருக்கிறார். 125க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக்கு கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.— இப்படி எல்லாவற்றிலும் சரித்திரத்தில் நம்பர் ஒன் ஆகத் திகழ்ந்த இந்தியர்கள், இன்றும் நம் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்டி வருகின்றனர். 

உதாரணத்திற்கு: அமெரிக்காவில் உள்ள டாக்டர்களில், 38 சதவீதம் இந்தியர்கள்; விஞ்ஞானிகளில், 12 சதவீதம் இந்தியர்கள்; விண்வெளி துறையான, "நாசா'வில், 36 சதவீதம் இந்தியர்கள்; பில்கேட்சின், "மைக்ரோ சாப்ட்' நிறுவனத்தில், 34 சதவீதம் இந்தியர்கள்; கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்.,மில் 28 சதவீதம் இந்தியர்கள்; அதே போல, "இன்டெல்' கம்ப்யூட்டர் நிறுவனத்தில், 17 சதவீதம் இந்தியர்கள்; "சிராக்ஸ்' நிறுவனத்தில், 13 சதவீதம் இந்தியர்கள்; அமெரிக்காவில், 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்...


இவை சிறு எடுத்துக்காட்டு தான்; அரசியல், ஜாதி, மதம் இவற்றை ஒதுக்கி வைத்து, நம் மக்கள் தம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை தானே!

நன்றி...! கல்விச்சோலை.

Thursday, 9 August 2012

நேருஜீ

நேரு உடன் பத்மினி,லலிதா!!

காலம் ஓர் கணக்கீடு..

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.
1. வைகறை
2. காலை
3. நண்பகல்
4. எற்பாடு
5. மாலை
6. யாமம்
என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்