வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Monday 7 June 2021

உங்கள் பெயரில் எத்தனை தொலைபேசி...?

 

 உங்கள் கைவசம் உங்கள் பெயரில் இருக்கும் அலைபேசி...

 


கீழ்கண்ட மத்திய அரசின் தொலை தொடர்பு இணையத்தளத்திற்கு சென்று,  உங்கள் கைவசம் உங்கள் பெயரில் இருக்கும் அலைபேசி எண்ணை உள்ளிட்டு, கிடைக்கும் OTP-யை உள்ளிட்டால், உங்கள் பெயரில் எத்தனை அலைபேசி எண்கள் பயன்பாட்டில் இருக்கின்றது என்று அறிவிக்கும்.  உங்களுக்கு  தெரியாத அலைபேசி எண் இருந்தால், அவற்றை குறிப்பிட்டு “This is not my number’ என்று தேர்வு செய்து “Submit’ செய்தால், உங்களுக்கு ஒரு Ticket ID Ref No. வரும். அதை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.  (கைவசம் இருக்கும் அலைபேசி எண்ணை, அந்த தளத்தில் “This is my number. Required' என்று உள்ளிட அவசியமில்லை). தங்கள் உபயோகத்தில் இல்லாத எண்ணை மட்டும் குறிப்பிடவும்)
.
உங்களுக்கு தெரியாமல், உங்கள் அடையாள அட்டையை கொண்டு யாராகிலும் அலைபேசி எண் வாங்கியிருந்தால், உடனே அவற்றை இந்த முறையில் தொலைதொடர்பு துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று தங்கள் பெயரில் உள்ள அந்த எண்ணின் உபயோகத்தை நீக்க முடியும். இந்திய அரசின் தொலை தொடர்பு துறையின் இந்த சேவை மிகவும் பாரட்டத்தக்கது.  காலம் தாமதிக்காமல், உங்கள் உபயோகத்தில் உள்ள அலைபேசி எண்களை சரி பார்த்து கொள்ளவும்.
.
https://tafcop.dgtelecom.gov.in

No comments: