வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Thursday, 15 May 2014

ஆயிரம் ரூபாய் நாணயம்

ஆயிரம் ரூபாய் நாணயம் அச்சடிக்க நாடாளுமன்றம்  ஒப்புதல் அளித்தது.
ஆனால், அது எப்போது அச்சடிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என்று அரசு அறிவிக்கவில்லை. இந்திய நாணயங்கள் சட்டத்தை 2009ல் அரசு திருத்தியது. அதில் 1,000 ரூபாய் வரை நாணயம் அச்சடிக்க உச்சவரம்பு வைக்க நாடாளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் அதற்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த திருத்த சட்டம், மாநிலங்களவையில் நேற்று விவாதிக்கப்பட்டது. இந்திய நாணயங்கள் சட்டம் 2009ன்படி நாணயங்கள் அச்சடிப்பதற்கான தொகை உச்சவரம்பு 1,000 ஆக உயர்த்த மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது.

    அதன் மீது பேசிய பல எம்.பி.க்கள், ‘நாலணா’ என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்த 25 காசு நாணயத்தை செல்லாது என்று சமீபத்தில் அறிவித்ததற்கு கவலை தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ‘‘பொருளாதார நிலை மாறி விட்டது. நாணய மதிப்பு குறைந்து வருகிறது. அதற்கேற்ப எடுக்கப்பட்ட ஒரு முடிவு இது. எனவே, அதை ஏற்பதை தவிர வழியில்லை’’ என்றார். விவாதத்தில் மேலும் அவர் பேசியதாவது:

    நாணயங்கள் அச்சடிப்பதற்கான தொகை உச்சவரம்பு 1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.1,000 நாணயம் கூட அச்சடிக்கலாம். எனினும், இப்போதைக்கு அது ஒரு அனுமதியாக மட்டுமே நாணயங்கள் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. புழக்கத்தில் உள்ள 10 லட்சம் கரன்சி நோட்டுகளில் 8 வரை கள்ள நோட்டுகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டு வெளியிடுவோர், நாணயங்களை உருக்குவோருக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும்.

    நாணயங்கள் சட்டத்தில் கரன்சி நோட்டு மற்றும் நாணயங்கள் அச்சடிப்பதை வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதை அனுமதிக்க கூடாது என்று காங்கிரஸ், பா.ஜ. உட்பட அனைத்து கட்சி எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதற்கு பதிலளித்த பிரணாப், ‘‘கரன்சி அச்சடிப்பு நம்நாட்டின் தேசிய கவுரவம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். 1997&98ல் கரன்சி அச்சடிப்புக்கான இங்க் உலக அளவில் 2, 3 நிறுவனங்களே தயாரித்ததால் வெளிநாடுகளில் அச்சடித்து பெறப்பட்டது. கரன்சி அச்சடிக்க தேவையான தரமான காகித தயாரிப்பில் தன்னிறைவு பெற அரசு முயற்சிக்கும்’’ என்றார்.

    இப்போது ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, நொய்டா ஆகிய கரன்சி அச்சடிப்பு மையங்களில் ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களை மத்திய அரசு அச்சடித்து வருகிறது. 1,000 ரூபாய் நாணயம் வெளியிட புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள போதிலும், அது எப்போது அறிமுகமாகும் என அரசு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 6 March 2014

கேவலமான உண்மைகள்.....?


சிந்திக்க சில விஷயங்கள்... {கேவலமான உண்மைகள்.}


1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!



-படித்ததில் பிடித்தது..( by அக்னி சிறகுகள்). 
 
source : tamilcube.com

Friday, 28 February 2014

வியக்கத்தகு உண்மைகள்.....



1.உங்களுக்கு தாகம் எடுக்கவில்லையானால் நீங்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால், ஏதோ ஒரு காரணத்தால் நம் உடலில் உள்ள நீர் சத்து முற்றிலும் தீர்ந்து விடுமானால் தாகம் எடுக்கும் செயல்பாடு நிறுத்தப்பட்டுவிடுகிறது.

2.சுவிங்கத்தை மென்று கொண்டே வெங்காயத்தை உரித்தால், கண்ணில் நீர் வராது.

3.உங்கள் நாக்கு இளஞ்சிவப்பு (pink)நிறத்தில் இருந்தால் மட்டுமே உங்கள் நாக்கில் கிருமிகள் இல்லையென்று பொருள் அன்றி வெண்மையாக இருப்பின் வெண்படலமாக பாக்டீரியா படர்ந்து இருக்கிறது என்று பொருள்.

4.SOS என்ற வானொலி அலை முதல் முதலாக டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்டது

5.ஆச்சர்யமான விஷயங்களை பார்க்கும் போது மனிதனுடைய கண்கள் 45 சதவீதம் வரை விரிவடைகின்றன.

6.குகையை விட்டு வெளியேறும் வவ்வால்கள் எப்பொழுதும் இடது பக்கமாகவே திரும்புகின்றன.

7.தேன் மிக எளிதாக ஜீரனிக்க காரணம் அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுள்ளது.

8.சேவல்களால் அதண் கழுத்தை உயர்த்தாமல் கூவ முடியாது.

9.நாம் தும்மும் ஒவ்வொரு தும்மலுக்கும் மூளையிலுள்ள உயிரணுக்கள் சில இறக்கின்றன.

10.இருதயத்துக்கு இடமளிப்பதற்க்காக உங்களது இடது பக்க நுரையீரல் வலது பக்க நுரையீரலை விட சிறியதாக இருக்கும்.

நன்றி : இணையம்

Sunday, 3 November 2013

தமிழில் "கிரெம்ளின் மாளிகை"

Great Kremlin Palace, Moscow, Russia- தமிழில் "கிரெம்ளின் மாளிகை"(ரஷ்ய அதிபர் மாளிகை)

தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ அவமானமாகப் பார்க்கும் நிலை இன்றுள்ள தமிழர்களிடையே பரவியுள்ளது. நம் மொழியை நாம் பேசவே தயங்குகிறோம் அந்த அளவுக்குப் போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கௌரவிக்கிறது, கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.

உலகில் 6 மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சம்ஸ்கிருதம். இந்த 6 மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி, எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக தமிழ்மொழி தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை' எனத் தமிழில் எழுதினோம்'' என்று கூறுகிறார்கள். மேலும், அங்கே வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களுள் நமது திருக்குறளும் ஒன்று.

வெளிநாட்டில் உள்ளவர்களுக்குக் கூட நம் தமிழின் பெருமை தெரிந்துள்ளது. ஆனால், நாமோ தமிழைக் காப்பாற்ற கருத்தரங்கு நடத்திக் கொண்டிருக்கிறோம் தமிழராக பிறந்து தமிழ் பேசத் தயங்கும் தமிழர்கள், வியாபார நிலையங்களில் தமிழ் பெயரை பொறிக்க தயங்கி ஆங்கிலத்தில் வைத்திருக்கும் தமிழர்கள் இனியாவது தமிழ்மொழியின் அருமை பெருமையை உணர்ந்தால் சரி!

Monday, 28 October 2013

மின்சாரம் இல்லை...தமிழில் தகவல் அறிய..


மாலை வீடு திரும்பியவுடன் , வீட்டில் மின்சாரம் இல்லை. மகளிடம் விசாரித்தேன், மூன்று முறை இதுவரை அறிவிக்கப்படாத மின்வெட்டு என தெரிந்துகொண்டு, காலாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள மகளுக்கும் பயனுள்ளதா ஏதாவது கற்றுக்கொடுக்கலாமே என்று முடிவுசெய்தேன்.

155333
டயல் செய்ய சொல்லி , தமிழில் தகவல் அறிய எண் ஒன்றை அழுத்தவும் என்ற குரலுக்கு ஏற்ப அழுத்திவிட்டு காத்திருந்தாள். அந்தபக்கம் வழக்கமா பேசக்கூடிய நபர் , இன்னும் அரைமணி நேரத்தில் கரண்ட் வந்துவிடும் என சொல்லிவிட்டு டொக்கென்று வைத்துவிட்டார். மறுபடியும் ஃபோன் போட சொன்னேன். புகார் எண் கண்டிப்பாக வேண்டும் என கூறியவுடன்தான் நம் முகவரியையே கேட்க ஆரம்பித்தார். சொன்னபடியே அரைமணிநேரத்தில் மின்சாரமும் வந்தது.

நமக்கு மின்வெட்டு ஏற்பட்டாலே சலித்துக்கொள்கிறோம். நமது கடமை, உரிமை என்னவென்றே தெரியாமல் புலம்புவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளோம். அறியாமையை ஒழிப்போம், விழிப்புணர்ச்சி பெறுவோம்.

இனி மின்வெட்டு ஏற்பட்டால் நீங்கள் டையல் செய்யவேண்டிய எண் 155333, மறவாமல் புகார் எண்ணையும் கேட்டுவாங்கி குறித்துக்கொள்ளுங்கள்.

மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்

http://youtu.be/7TByE86yrt8