வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Friday, 5 August 2011

சமைத்து பாருங்களேன்..


1உப்புமா கொழுக்கட்டை மிக்ஸ்

தேவையானவைபச்சரிசி - 150 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.

உப்புமா கொழுக்கட்டை செய்ய: தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறைஅரிசியை மிக்ஸியில் ரவையாக உடைத்து சலிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைப் போட்டு, சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, உடைத்த ரவையில் கொட்டிக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

உப்புமா கொழுக்கட்டை தேவைப்படும்போது, கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு ரவை கலவைக்கு 2 பங்கு தண்ணீர்) கொதிக்க வைத்து அரிசி ரவை மிக்ஸ், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வைக்கவும். அரிசி ரவை நன்றாக வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து, வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாயே போதும். சட்னிகூட தேவையில்லை. மூன்று வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்
.
2. மோர்க்குழம்பு மிக்ஸ்

தேவையானவை: துவரம்பருப்பு,கடலைப்பருப்பு - தலா 50 கிராம், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா, சீரகம் - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, பெருங்காயத்தூள் - சிறிதளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், எண்ணெய் - சிறிதளவு.

மோர்க்குழம்பு செய்ய: தயிர் - 100 கிராம், தேங்காய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, ஏதேனும் ஒரு காய்கறி (வெண்டை, பூசணி, வாழை), எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: பருப்பு வகைகள், அரிசி, தனியா, சீரகம், 5 காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, 2 காய்ந்த மிளகாய் தாளித்து... மிக்ஸியில் அரைத்த பொடியுடன் சேர்த்துக் கலக்கி, சேமித்து வைக்கவும்.

மோர்க்குழம்பு தேவைப்படும்போது தயிரை நன்றாகக் கடைந்து, தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். தயாரித்து வைத்திருக்கும் மோர்க்குழம்பு மிக்ஸை இதனுடன் கலந்து மஞ்சள்தூள் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து நுரை வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காயைப் போட்டு வறுத்து, மோர்க்குழம்பில் சேர்க்கவும். இரண்டு வாரங்கள் வைத்திருந்து இந்த மிக்ஸை பயன்படுத்தலாம்.

3.ரெடிமேட் சாம்பார் மிக்ஸ்

தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், உளுத்தம்பருப்பு, தனியா, கடலைப்பருப்பு, கொப்பரைத் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 அல்லது 10, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு, வெயிலில் நன்றாக காய வைத்த புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - தேவையான அளவு.

சாம்பார் செய்ய: நறுக்கிய முருங்கை, கத்திரிக்காய், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: வெறும் கடாயில் பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய், தனியாவை வறுத்துப் பொடிக்கவும். புளி, கொப்பரை துருவலையும் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும். இரண்டு பொடிகளையும் ஒன்றாக சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் கலந்து... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, சேமித்து வைக்கவும்.

சாம்பார் தேவைப்படும்போது முருங்கைக்காய், கத்திரிக்காயை நறுக்கி உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அரைத்த சாம்பார் மிக்ஸை தேவைப்படும் அளவுக்கு இதில் சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். சாம்பார் வாசனை வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும். இரண்டு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

4.ரவா உப்புமா மிக்ஸ்

தேவையானவைவெள்ளை ரவை - 200 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 10, காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - சிறிதளவு.
 
உப்புமா, கிச்சடி செய்ய: மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய், நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகள் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ரவையைப் போட்டு நன்றாக வறுத்து, தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், முந்திரி, கறி வேப்பிலை போட்டு சிவக்க வறுத்து, ரவையில் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

உப்புமா தேவைப்படும்போது, கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து (ஒரு பங்கு உப்புமா மிக்ஸ் சேர்த்து இரண்டு பங்கு தண்ணீர்), ஒரு டம்ளர் உப்புமா மிக்ஸ், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். ரவை வெந்ததும் நெய் அல்லது எண்ணெய் விட்டு மூடி வைத்து, 5 நிமிடம் 'சிம்’மில் வைத்து இறக்கினால் உப்புமா தயார்.

தண்ணீர் கொதிக்கும்போதே மஞ்சள்தூள், வதக்கிய காய்கறிகளை சேர்த்து, ரவா கிச்சடி போலவும் செய்யலாம். ஐந்தே நிமிடத்தில் செய்துவிடக்கூடிய அருமையான டிபன் இது. இந்த மிக்ஸை இரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

5.அரிசி உப்புமா மிக்ஸ்

தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் - சிறிதளவு, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, துவரம்பருப்பைக் கலந்து மெல்லிய ரவையாக மிக்ஸியில் உடைத்து சலித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைப் போட்டு சிவக்க வறுத்து... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து, உடைத்த ரவையுடன் கலந்து சேமித்து வைக்கவும்.

அரிசி உப்புமா தேவைப்படும்போது, கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு ரவைக்கு 3 பங்கு தண்ணீர்), உடைத்து சலித்த ரவை, உப்பு சேர்த்துக் கிளறி, நன்றாக வேக விடவும். ரவை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து மூடி, அடுப்பை 'சிம்’மில் 5 நிமிடம் வைத்து இறக்கி, சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: உப்புமா கிளறும்போது தண்ணீர் பற்றாமல் போனால், கொதிக்கும் தண்ணீரை ஊற்றிக் கிளறலாம். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.


நன்றி - அவள் விகடன்

கறுகறு கூந்தல் வேண்டுமா?

கறுகறு கூந்தலுக்கு..

      சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும்போதும் மண்டை ஓட்டுப் பகுதித் தோலை (Scalp) விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள்.
ஷாம்பூ, சோப்பு வகைகளுக்கு `டாட்டா' சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
உணவில் கீரை, முளைக்கட்டிய பயறு வகைகள், உலர் திராட்சை, பே‌ரி‌ச்சை போன்றவைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இரவில் பால் குடிப்பதை மறக்க வேண்டாம்.
கூந்தலில் அழுக்கு, சிக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
எப்போதும் சுத்தமான நீரிலேயே கூந்தலை கழுவ வேண்டியது அவசியம். குளிர்ந்த அல்லது இளம் சூடான தண்ணீரையே பயன்படுத்துங்கள்.
டென்சனைக் குறையுங்கள். மகிழ்வோடு இருங்கள். அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் மட்டுமல்ல முடியிலும் தெரியும்.
வாசனைத் திரவியங்கள், பாடி ஸ்பிரே போன்றவைகளைத் தவிருங்கள்.
அடிக்கடி தலைவலியா? அலட்சியப்படுத்தாதீர்கள். டாக்டரிடம் காட்டுங்கள். தலைவலியால் முடி உதிர்வது நிச்சயம்.
பேன், பொடுகு, முடி நுனி வெடிப்பு, போன்ற வகைகளுக்கு டாக்டரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

நன்றி.. வெப்துனியா..







Tuesday, 2 August 2011

அனுபவத்தின் விலை.. ?

    புகழ் பெற்ற பிக்காசோ வாலையில் போய்க்கொண்டிருந்தார். ரசிகை ஒருத்தி ஓவியம் வரைந்து கொடுக்கச் சொன்னார். 30 வினாடிகளில் ஓர் ஓவியம் வரைந்து கொடுத்தார். ரசிகை '' இந்த ஓவியத்தை நான் என்ன செய்ய வேண்டும் ?''
''உனது வீட்டில் மாட்டி வை. இல்லை விற்பனை செய்தால் 30 ஆயிரம் டாலர்கள் கிடைக்கும்'' என்றார் பிக்காசோ. அந்த ரசிகை '' 30 வினாடியில் வரைந்த ஓவியத்திற்கு 30ஆயிரம் டாலர்கள் கிடைக்குமா ?'' என்றார்.
''இந்த ஓவியத்தை வரைவதற்கு எடுத்துக்கொண்ட நேரமோ 30 வினாடி. ஆனால் அதற்காக எடுத்துக் கொண்ட பயிற்சி 30வருடங்களாகும்'' என்றார் பிக்காசோ.

எங்க அப்பா...!


(மகனின் உளப்பாங்கு )
4 வயதில் -எங்கப்பாவால் எதையும் செய்ய முடியும்.
5 வயதில் - எங்கப்பாவுக்கு நிறையத் தெரியும்.
6 வயதில் - எங்கப்பா உங்கப்பாவை விடப் புத்திசாலி.
8 வயதில் - எங்கப்பாவுக்கு எல்லாம் சுரியாகத் தெரியாது.
10 வயதில் - பழைய நாட்களில் எங்கப்பா வளர்ந்த போது விசயங்கள் நிச்சயம்   வேறு மாதிரி இருந்திருக்ககும்..
12 வயதில் - இயல்பாக அப்பாவுக்கு அதைப்பற்றியெல்லாம் தெரியாது. குழந்தைப் பருவத்தை ஞாபகம் கொள்ள முடியாத அளவிற்கு ரொம்ப வயதாகி விட்டது.
14 வயதில் - எங்கப்பாவுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்க வேண்டாம். அவர் பழைய காலத்து மனுசன் !
21 வயதில் - அவரா ? கடவுளே ! இன்றைக்கு அவர் எந்த விதத்திலும் ஒத்து வராதவர்.
25 வயதில் - அப்பாவுக்கு இதைப்பற்றி கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும். அவர் நீண்ட காலத்தை கடந்து வந்தவர் அல்லவா ?
30 வயதில் - அப்பா என்ன நினைக்கிறார் என்று கேட்கலாம். அவருக்கு நிறைய அனுபவம் உண்டு.
35 வயதில் - நான் எங்கப்பாவைக் கேட்காமல் ஒரு சின்ன விசயத்தைக் கூட செய்யறதில்லை.
40 வயதில் - அப்பா எவ்வளவு அழகா இந்த விசயத்தைக் கையாண்டுட்டார்னு ஆச்சரியமாக இருக்கு . அவருக்கு விவேகம் அதிகம். உலக அனுபமும் இருக்கு.
50 வயதில் - நான் எதுவாக இருந்தாலும், இங்கே அப்பா இருந்தால் அதை அவரிடம் ஒப்படைச்சுடுவேன். எனவே இந்த விசயத்தைப் பற்றி அப்பாவிடம் பேசலாம். நான் அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டிருக்கலாம்..

யார் ஜெயிக்கிறார்கள் …..?


      60 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகள் பலரிடம், ''உங்கள் நீடித்த இல்லறத்தின் ரகசியம் என்ன ?'' என்று தனித்தனியாக கேட்டார்கள். ''என் கணவர் எனக்காக செய்த தியாகங்கள்'' என்று மனைவிமார்கள் சொன்னார்கள். ''என் மனைவி எனக்காக செய்த தியாகங்கள்'' என்று கணவர்மார்கள் சொன்னார்கள். ஆய்வாளர், தன் குறிப்பில் இப்படி எழுதினார். ''திருமண வாழ்க்கை என்பது உரிமைகளை நிலைநாட்ட என்று நினைப்பவர்கள் தோற்கிறார்கள். உரிமைகளை விட்டுக் கொடுப்பதே என்று நினைப்பவர்கள் ஜெயிக்கிறார்கள்.

அறிவு…..?


        எல்லோரிடமும் அறிவு இருக்கிறது. இதைச் சூழ்நிலை, சந்தர்ப்பம் அறிந்து செயல்படுத்தினால் நன்மை கிடைக்கும். அமெரிக்காவைச் சேர்ந்த இராபர்ட் என்பவர் பத்திரிக்கையில் ஒரு விளம்பரம் கொடுத்தார். 20வது நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு. பேனாவும், மையும் இல்லாமல் அற்புதமாக எழுதலாம். விபரம் அறிய ஒரு டாலர் அனுப்புங்கள் என்று. இராபர்ட்டுக்கு மணியார்டர்கள் வந்து குவிந்தன. அதற்கு அவர் எழுதிய பதில் இது தான். '' புத்திசாலிகளே ! பென்சிலை வைத்து எழுதுங்கள், இராபர்ட் ஏமாற்றவில்லை. நிதானமாக யோசிக்காமல் பணம் அனுப்பியவர்கள்தான் ஏமாந்தார்கள்.
   

புத்தக விலை…..?

        கன்னட கவிஞர் புட்டப்பா ஞானபீடப் பரிசினை பெற்றவர். அவரிடம் ஓர் இளைஞன், ''உங்கள் நூலுக்கு 50 ரூபாய் விலை என்பது மிக அதிகம்'' என்றார். கவிஞர் புட்டப்பா '' உன் காலில் போட்டுள்ள செருப்பின் விலை என்ன?'' என்று கேட்டார். அவன் ''150 ரூபாய்'' என்றான். காலில் போட்டுக்கொள்ள 150ரூபாய் செலவழிக்கிறாய்.. தலையில் நல்ல விசயங்களைப் போட்டுக்கொள்ள 50 ரூபாய் அதிகம் என்கிறாயே ? என்று கேட்டார். இளைஞன் வாயைத்திறக்கவில்லை.
  

Monday, 1 August 2011

உருகும் ஆர்க்டிக் பனி..?

ருகும்ர்க்டிக்னியிலிருந்து வெளியாகும் நச்சுசாயனங்கள்

ஆர்க்டிக் பிரதேச கடல் பனி உருகுவதிலிருந்து - மோசமானது, நச்சுத் தன்மையுடையது என்று கருதப்படும் டீ.டீ.டி (DDT) என்ற நச்சு ரசாயனம் உட்பட பல்வேறு தடைசெய்யப்பட்ட நச்சு ரசாயனங்கள் வெளியேறுவதாக நேச்சர் இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவித்துள்ளது.
இந்த ரசாயனங்கள் ஆய்வுலகில் "டேர்ட்டி டஜன்" (Dirty Dozen) என்று அழைக்கப்படுகிறது.
டீ.டீ.டி. என்பது "டைகுளோரோ டை ஃபினைல் டிரைகுளோரோஇதேன்" என்ற ரசாயனமாகும். இது பூச்சிக்கொல்லி மருந்தாக நீண்ட நாட்கள் பயன்படுத்தப்பட்டு வந்து பிறகு இதன் மோசமான சுற்றுச்சூழல், மற்றும் மனித உடல் ஆரோக்கிய விரோத செயல்கள் காரணமாக நீண்ட ஆண்டுகளுக்கு முன்னரே தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
2001ஆம் ஆண்டு இதன் பயன்பாடு உலகம் முழுதும் தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரசாயனம் இயற்கையில் கரைந்து போக பல ஆண்டுகள் பிடிக்கும். மேலும் இது உயிர்பெருக்கம் அடையக்கூடியது. அதாவது உணவுச் சங்கியில் தாக்கம் செலுத்தி பல உயிரிகளின் இனப்பெருக்கக் கூறுகளை அழிக்கவல்லது.
மேலும் இது நீரில் கரைக்க முடியாதது. இதனால் மண்ணிலிருந்து நீருக்கும், பிறகு விண்ணுக்கும் விரைவில் சென்று தஞ்சமடைவது.
1993ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை ஆர்க்டிக் கடல் பனி உருகுதலை ஆய்வு செய்தபிறகு இந்த நச்சு ரசாயனங்களின் வெளியேற்றம் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இத்தனையாண்டுகளாக இந்த நச்சு ரசாயங்கள் பனிபாறைகளில் படிந்துள்ளன. தற்போது புவி வெப்பமடைதல் காரணமாக பனி உருகும்போது இவை மீண்டும் வெளியேறுவது தொடர்ந்து வருகிறது.
இந்த 12 நச்சு ரசாயனங்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஆர்க்டிக் பிரதேச வான்வெளியில் சென்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வை நடத்திய கனடா நாட்டுச் சுற்றுச்சூழல் கழகம் இதனை பேராபத்து என்று எச்சரித்துள்ளது.
டீ.டீ.டி. ரசாயனத்தின் தாக்கம் பற்றி அமெரிக்காவின் நோய்கள் தடுப்பு மையம் 2005ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொண்டபோது அப்போது அமெரிக்க மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் ஏறத்தாழ அனைத்து மாதிரிகளிலும் இந்த நச்சு ரசாயனம் இருப்பது தெரியவந்தது.
இந்த ரசாயனம் அனைத்து உயிரிகளுக்கும் ஊறு விளைவிப்பதோடு, மனித உடலில் சொல்லொணாத நோய்களை உருவாக்குவது என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்றே.


--பவள சங்கரி திருநாவுக்கரசு. 04:59, 27 ஜூலை 2011 (UTC)
நன்றி - வெப்துனியா



ஐன்ஸ்டீன் பற்றி தெரியாத செய்தி!

 விஞ்ஞானி ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்  (1879-1955) பற்றி பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. அவர் அறிவியல் அறிஞர் - அணுவின் ஆற்றலைக் கண்டு பிடித்தவர், ஒளிமின் விளைவைப்பற்றிக் கண்டு பிடித்ததற்காக நோபெல் பரிசு அளிக்கப்பட்டவர் என்றெல்லாம் பொதுவாக அறியப்படுகிறது.

அதே நேரத்தில் கடவுள் பற்றி மதம் பற்றி அந்த அறிவியல் அறிஞன் என்ன சொன்னான் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

மதம், கடவுள் பற்றி அய்ன்ஸ்டீன் என்ன கருத்தைக் கொண்டிருந்தார் என்று எத்தனை ஏடுகள் எடுத்து இயம்புகின்றன?

அவர் ஆன்மிகவாதியாக இருந்திருந்தால், அவர்தம் கண்டுபிடிப்புகளை விட, அவரின் ஆன் மிகச் சிந்தனைகளை; அடேயப்பா, ஆகாயம் வரை கொண்டு சென்று இருப்பார்களே!

2008 அக்டோபர் 12 ஆம் தேதி இந்து ஏட்டில்  ஒரு தகவல் வெளிவந்தது.

உலகப் புகழ் பெற்ற அறிவியல் மேதை ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் கடிதங்கள் ஏலத்திற்கு வந்தன. அவற்றுள் ஒரு கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது.

மத நம்பிக்கைகள் சிறுபிள்ளைகளின் மூட நம்பிக்கைகள்; மனித இனத்தின் பலவீனத்தால் உருவானவை என்று அந்தக் கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. இந்தக் கடிதத்தை (Biologist)  ரிச்சர்டு டாகின்ஸ் ஏலம் எடுக்க முனைந்தார்; முடியவில்லை. 1,70,000 பவுண்டுக்கு ஏலம் போனது என்ற தகவலை தி இந்து ஏடு வெளியிட்டு இருந்தது.

நோபெல் பரிசு பெற்ற பெரும்பாலான விஞ்ஞானிகள் கடவுள் மறுப்பாளர் களாகவும், மதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களாகவுமே இருந்து வந்திருக்கின்றனர் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

அய்ன்ஸ்டீன் ஒரு தலை சிறந்த விஞ்ஞானி என்றா லும் அவர் யூதர் வகுப்பில் பிறந்ததால் ஹிட்லரின் வெறுப்புக்கு ஆளானவர். ஜெர்மனியை விட்டு அமெ ரிக்கக் குடிமகன் ஆனவர்.

மனித மூளையின் ஆற்றலை அதிகப்படியாகப் பயன்படுத்தியவர் அய்ன்ஸ்டீன் என்று கூறப்படுகிறது.

இவரது மூளை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது கூடுதல் தகவ லாகும். இன்று அவரது நினைவு நாள் (1955).

- மயிலாடன்
நன்றி:விடுதலை (18 ஏப்ரல் 2011)