வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Tuesday, 9 August 2011

சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ்

மீனாக இருந்தாலும், கருவாடாக மாறினாலும் நெத்திலி மீன் சுவையை அடித்துக்கொள்ள முடியாது. இதை மணக்க மணக்க குழம்பு செய்வதுபோலவே, மசாலாவில் வறுத்தெடுத்து ருசிப்பதும் ஆனந்தம்தான். இந்த ரெசிபி செய்ய இந்த வாரம் கற்றுக் கொள்வோம். இதை தொட்டுக் கொள்ள வைத்துக் கொண்டால், கெட்டியான பதத்தில் சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ் செய்து குழம்பு போல ருசிக்கலாம். கிளம்புங்க கிச்சனுக்கு…
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/2 கிலோ
முட்டை – 4
சாம்பார் வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 6 பல்
காய்ந்த மிளகாய் – 4
தனியா – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணைய் – 1 குழிக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க
செய்முறை
* சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.
* முட்டையை வேக வைத்து மஞ்சள் கருவை நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
* தனியா, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, வெங்காயம் இவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
* அரைத்த மசாலாவை சேர்த்து சிக்கனையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேக விடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
* சிக்கனும், மசாலாவும் சேர்ந்து கெட்டியானதும் வெட்டி வைத்த முட்டையைச் சேர்த்துக் கிளறவும்.
* குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
செப்’ தாமு

No comments: