வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Tuesday, 9 August 2011

சுவைமிகு கொழுக்கட்டை

ம் இந்திய உணவு வகைகள் பலவற்றிலும் ஒவ்வொரு செய்தி அல்லது நுணுக்கம் பூடகமாக ஒளிந்திருக்கும். அவ்வகையில் கொழுக்கட்டை என்பது வெளிப்புறத்தில் உப்பு கலந்த மாவையும், உள்ளே இனிப்பு சுவையுடன் கூடிய பூரணத்தையும் உள்ளடக்கியது.
இன்பங்கள் பொதிந்து, துன்பங்களும் அடங்கியதுதான் வாழ்க்கை. துன்பங்களை ஆராய்ந்தால் அவற்றுள் பொதிந்து கிடக்கும் இன்பங்கள் புலப்படும் என்பதை தெரிவிக்கும் வண்ணமே உப்பு சுவையுடன் கூடிய மேல் மாவினுள், இனிப்பு பூரணம் வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை செய்யப்படுகிறது எனலாம்.
வயது வரம்பின்றி அனைவரும் விரும்பும் மோதகம் (கொழுக்கட்டை) ரொம்ப சுலபமாக செய்யலாம். குழந்தைகளுக்கு கொள்ளைப் பிரியமான கொழுக்கட்டையை இப்போது செய்யக் கற்றுக்கொள்வோமா?
தேவையான பொருட்கள்
மேல் மாவிற்கு:
பச்சரிசி – 1 கப்
தண்ணீர் – 11/2 கப்
நல்லெண்ணெய் – 2 சிட்டிகை
வெல்ல பூரணத்திற்கு:
வெல்லம் – 1 கப்
தேங்காய்த் துருவல் – 2 கப்
ஏலக்காய்ப் பொடி – 1/4 டீஸ்பூன்
செய்முறை
* மேல் மாவு செய்ய: ஒரு கப் பச்சரிசியை 6 மணி நேரம் ஊற வைத்து, ஒரு கப் நீர் சேர்த்து மிக நைசாக அரைக்கவும். அதனுடன் அரைக் கப் நீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்.
* நான்-ஸ்டிக் தவாவில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அரைத்த அரிசி மாவு, 1 சிட்டிகை உப்பு சேர்த்து மிதமான தீயில் மாவு நன்கு உருண்டு, திரண்டு தவாவில் ஒட்டாமல் வெந்து வரும் வரை கிளறவும்.
* மாவை ஒரு ஈரத்துணியில் சுற்றி வைக்கவும்.
* வெல்லப்பூரணம் செய்ய: அடிகனமான வாணலியில் சிறிது நீர் ஊற்றி பொடியாக அரிந்த வெல்லம் போட்டு வெல்லம் கரையும் வரை கொதிக்கவிட்டு கெட்டியான வெல்ல நீரை தூசு நீங்க வடிகட்டிக் கொள்ளவும்.
* வாணலியில் தேங்காய்த் துருவல், வடிகட்டிய வெல்ல நீர், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கலந்து வரும்வரை கிளறி வெல்லப் பூரணம் தயாரிக்கவும்.
கொழுக்கட்டை செய்ய:- வெல்லப் பூரணத்தை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
* தயாரித்த மேல் மாவை நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக்கி கிண்ணங்கள்போல் அதில் சிறு குழி செய்து, அதனுள் வெல்லப் பூரண உருண்டையை வைத்து மூடி கொழுக்கட்டை போல வடிவமைத்து ஆவியில் வேக வைத்து பரிமாறவும்.
குறிப்பு:
* மேல் மாவு உருண்டையை இரு கட்டை விரல்களால் அழுத்தி அழுத்தி மெல்லிய சொப்பு போல் வடிவமைத்து அதனுள் வெல்லப் பூரண உருண்டையை வைத்து மாவை நன்கு இழுத்து மூட வேண்டும். இது கொழுக்கட்டை ஆவியில் வேகும்போழுது பூரணம் வெளியே வராமல் இருக்க உதவும்.
கீதா பாலகிருஷ்ணன்

No comments: