வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Friday, 30 September 2011

தமிழ் நாட்டின் தலை விதி..?

 
சோற்றுக்கு அரிசி இலவசம்

மாவாட்ட, மசாலா அரைக்க
க்ரைன்டர், மிக்சி
இலவசம்.

வியர்க்காத உடலுக்கு
காற்று வாங்க மின்விசிறியும்
இலவசம்
உண்ட களைப்பு நீங்க
கண்டு காண தொலைக்காட்சி
இலவசம்

எஞ்சிய பொழுது வலையில் மேய
மாணவர்களுக்கு மடிக்கணினி
இலவசம்.

படிப்பு ஏறாமல் பரிதவித்து போனால்
பட்டிதொட்டியில் படுத்துறங்க
ஆடு, மாடுகள்
இலவசம்.

தாலிக்கு தங்கம் இலவசம்
குடும்ப கட்டுப்பாட்டுக்கு ஐநூறு
கர்ப்பிணிக்கு பத்தாயிரம்
முடிவை மக்களிடையே விட்டு
யோசிக்க நேரம்
இலவசம்.

இலவசம் என்று கொச்சை படுத்தாமல்
விலையில்லா அரிசி, மிக்ஸி, மடிக்கணினி
என பக்குவமா பெயர் வைத்து
போதையில் பொருளீட்டி
மேதைகள் செய்யும் ஆட்சி
வாழ்க தமிழகம்.

Thursday, 29 September 2011

தொல்லை தரும் தொலைபேசி..?

டெல்லி : செல்போன் இணைப்புச் சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு.



இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. “தேவையற்ற அழைப்புகளின் பதிவு” (Registration of unwanted calls) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இதில் பதிவு செய்ய 1909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.nccptrai.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். நீங்கள் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். அவ்வாறு புகார் கொடுக்கையில் விளம்பர அழைப்பு வந்த நேரம், தேதி ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம்.

தொல்லை செய்ய வேண்டாம் என்று பதிவு செய்தவர்களுக்கு விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.2.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.