வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Friday, 5 August 2011

முடி வளர சித்தமருத்துவம்

முடி வளர சித்தமருத்துவம்

முடி உதிர்வதை தடுக்க
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
முடி கருப்பாக:
ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
தலை முடி கருமை மினுமினுப்பு பெற:
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
செம்பட்டை முடி நிறம் மாற:
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
நரை போக்க:
தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:
கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
சொட்டையான இடத்தில் முடி வளர:
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
புழுவெட்டு மறைய:
நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

முடி வளர.......



2 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து மூழ்கும் அளவு தயிர் ஊற்றி ஊற வையுங்கள். மறுநாள் இதனை நைஸாக அரைத்து, இதனுடன் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறைக் கலந்து தலையில் தேயுங்கள். பத்து நிமிடம் ஊறவிட்டு, பிறகு தண்ணீரில் அலசினால் அழுக்கு அகன்று, மென்மையாகி, முகம் பார்க்குமளவுக்கு தலைமுடி பளபளக்கும். புரோடீன் சத்து நிறைந்த அருமையான இயற்கை ஷாம்பு இது.

---------------------------------------------------------------------------------

வெந்தயம் 1 கிலோ, முழு துவரை 1 கிலோ, புங்கங் கொட்டை 250 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம் இவற்றைஷி காயவைத்து, ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது ஷாம்புக்குப் பதிலாக இந்தப் பொடியை உபயோகியுங்கள். அழுக்கை நீக்குவதோடு, அட்டகாசமான கண்டிஷனராகவும் செயல்பட்டு முடியை இந்தப் பொடி பாதுகாக்கும்.

----------------------------------------------------------------------------------

வெந்தயப் பவுடர், கடுக்காய்த்தூள், டீத்தூள், மருதாணி பவுடர், தேங்காய் எண்ணெய், தயிர் ஆகியவற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதோடு ஒரு எலுமிச்சம்பழத்தின் சாறு ஊற்றி ஒன்றாகக் கலக்குங்கள். இரவில் இந்தக் கலவையைத் தயார்படுத்தி, மறுநாள் இதனை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு, குளியல் பொடி(அதன் செய்முறை கீழே)யைத் தேய்த்துக் குளித்தால், கொத்து கொத்தாக முடி உதிர்வது டக்கென்று நின்று, கருகருவென்று அடர்ந்து வளர ஆரம்பிக்கும். இளநரையும் ஓடிப்போகும்.

-----------------------------------------------------------------------------------

வெந்தயம் மட்டுமல்ல, அதன் கீரையும் அழகுக்கு கைகொடுக்கும் அற்புதத் தோழிதான். அதைக் கொண்டு செய்யப்படும் இந்தத் தைலம் தலைமுடி செழித்து வளர்வதில் உரமாகவே செயல்படுகிறது. வெந்தயக் கீரையை இடித்துப் பிழிந்தெடுத்த சாறு கால் லிட்டர், நல்லெண்ணெய் கால் லிட்டர்... இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சுங்கள். புகைந்ததும், அதில் ஒரு டீஸ்பூன் வால் மிளகு, நான்கு பிஞ்சு கடுக்காய்களை ஒன்றிரண்டாக தட்டிப் போட்டு இறக்கி வடிகட்டுங்கள். இதனை தினசரி தலையில் தேய்க்க, இளநரை மறைந்து, கரிய கூந்தல் மின்னும்.

-----------------------------------------------------------------------------------

விதை நீக்கி நன்றாகக் காயவைக்கப்பட்ட பெரிய நெல்லிக்காய் 50 கிராம், வெந்தயம் 50 கிராம், மிளகு 10 கிராம்... இவற்றை வறுத்துப் பொடியுங்கள். அரை கிலோ நல்லெண்ணெயைக் கொதிக்க வைத்து, பொடித்து வைத்துள்ள பவுடரைப் போட்டுப் புகைந்ததும் தீயை அணைத்து எண்ணெயை மூடி வையுங்கள். இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை போயே போய்விடும். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் இந்த எண்ணெய் தயாரிப்பில் நெல்லிக்காயைத் தவிர்த்துவிடலாம்.

No comments: