வெறும் வாணலியைச் சூடு செய்து, அதில் கைப்பிடி அளவு சோம்பைப் போட்டு, புரட்டுங்க. மிக்ஸியிலிட்டு பொடிச்சுக்குங்க. அரை லிட்டர் தண்ணியிலே போட்டு, நன்றாகக் கொதிக்க வெச்சு வடிச்சு, அடிக்கடி குடிச்சாலே தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
கைப்பிடியளவு பார்லியை நாலு மணி நேரம் ஊற வெச்சு, இரண்டு தம்ளர் நீரில் வேக வெச்சு, அந்தத் தண்ணீரைக் குடிச்சுட்டு வந்தாலும், கொழுப்புத் தசைகள் கரையும்.
தொப்பை மட்டுமல்ல, உங்க உடம்பே வாகாக இளைக்கணும்னா தினமும் காலையிலும் மாலையிலும், குனிஞ்சு நிமிருங்கள் வீட்டு ஹாலில் வரிசையாக பத்து கர்ச்சீப்புகளை போட்டுவிட்டு, குனிந்து எடுத்து பயிற்சி போல செய்யுங்க. குறிப்பாக உங்களுடைய அபிமான டீ.வி நிகழ்ச்சியின் போது செய்தால், டூ இன் ஒன் பலன் கிடைக்கும்!
ஃப்ரெஷ் சாலட் உங்களுக்குக் கை கொடுக்கும். குடைமிளகாய், மாதுளம்பழம், ஆப்பிள், உலர் திராட்சை, வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக்கி ஆலீவ் ஆயில், எலுமிச்சை சாறு போட்டு ஊற வைக்கவும். மதிய உணவின்போது ஒரு பெரிய கப் நிறைய சாலட்டையும் இரண்டு சப்பாத்தியையும் மட்டும் சாப்பிடவும். கண்டிப்பாக ஆறே மாதங்களில் செல்லத் தொப்பை காணாமல் போய், முல்லைப்பூ போல இருப்பீங்க!
தேவை
: வெள்ளரி விதை - 100 கிராம்,
சந்தனப் பவுடர் - 10 கிராம்,
வெட்டி வேர் - 25 கிராம்
உபயோகிக்கும் முறை:
வெட்டி வேரை, சிறு துண்டுகளாக வெட்டி, வெயிலில் ‘மொறு மொறு’ என்று உலர்த்தவும்.
அத்துடன் வெள்ளரி விதை, சந்தனப் பவுடர் சேர்த்து, மிக்ஸியில் பொடி செய்யவும்.
ராத்திரி இரண்டு ஸ்பூன் வெட்டி வேர் பவுடரை, தண்ணீரில் குழைத்து, வயிற்றில் தடவிக் கொண்டு படுக்கவும். வயிற்றின் தொள தொள சதைகள் நாளடைவில் இறுகி, புதுப் பொலிவுடன் இருக்கும்.
No comments:
Post a Comment