இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததன்
நினைவாக,ரூ.75 நாணயம் வெளி யிடப்பட்டு உள்ளது. சுதந்திர போராட்டத்
தியாகிகளை கவுரவிக்கும் வகையிலும், பொதுத்துறை நிறுவனங்களின்
சேவையைப் பாராட்டும் வகையிலும் இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது
நினைவு ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் ஆகியவற்றை வெளியிட்டு
வருகிறது. ஆனால், இதுபோன்ற நினைவு ரூபாய் நோட்டுகள்,நாணயங்கள்
சந்தையில் புழக்கத்திற்கு விடப்படுவதில்லை. நாணய சேகரிப்பாளர்கள்
இதற்கென சிறப்பு கட்டணம் செலுத்தி, பெற்று வருகின்றனர்.1935ஆம் ஆண்டு
தொடங்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த 2010ஆம் ஆண்டுடன் 75 ஆண்டு
கால சேவையை நிறைவு செய்துள்ளது. இதன் நினைவாக ரிசர்வ் வங்கி, ரூ.75
நாணயம், ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1 நாணயங்களை சிறப்பாக வெளியிட்டுள்ளது.
இந்த நாணயம், சில்வர் 50 , காப்பர் 40 , நிக்கல் 5 , துத்தநாகம் 5 ஆகிய உலோகக்
கலவையால் ஆனது. இதன் எடை 35 கிராம். 5 ரூபாய் நாணயம் காப்பர் 75 ,
துத்தநாகம் 20 , நிக்கல் 5 ஆகிய உலோகக் கலவையால் ஆனது. இதன் எடை 6
கிராம்.சேலத்தில் இந்த நாணயங்களை, சேலம் பாரா மஹால் நாணயவியல்,
தபால் தலையியல் கழக துணைத்தலைவர் சுல்தான், ரூ.3500 சிறப்புக்
கட்டணம் செலுத்தி, சேகரித்து வைத்துள்ளார்.
No comments:
Post a Comment