என் அம்மா தன் ஒரே மகனைபெரிய ஆளாக மாற்ற வேண்டும் என்ற கனவோடு என்னை பள்ளியில் சேர்க்கும் நாளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தாள். அந்தநாளும் வந்தது...நான் கொண்டையம் பாளையத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்தான் என் பள்ளி வாழ்க்கை ஆரம்பம் அனது...
அப்பா முதல் நாள் இரவே...எனக்கு ஒரு துணிப் பையும் சிலேட்டும் அ,ஆவன்னா அட்டை புத்தகமும் , சிலேட்டு பலப்பமும் வாங்கி வந்து விட்டார்...நாளையிலிருந்து பள்ளி போக வேண்டும் என்று நினைக்கும் போது மனதில் கொஞ்சம் சந்தோஷமும் நிறைய பயமுடன் கூடிய மனநிலையில் நான் இருந்தேன்...
ஒரு நாள்... என் அப்பாவோடு பள்ளிக்கு போனேன்...அன்று என் கைபிடித்து சதாசிவம் (H.M) என்பவர், என் வலது கையை தலைக்கு மேல் அரைவட்டம் அடித்து காது பிடிக்க சொன்னார்கள்... செய்தேன் இத்தனைக்கும் எனக்கு 5 வயதுதான் 6 வயது என்று பொய் சொல்லி என்னை பள்ளியில் சேர்த்தார்கள்.....
என் அம்மாவும் அப்பாவும் என்னை விட்டு போகும் போது எனக்கு கண்ணில் நீர் முட்டிக்கொண்டது...ஆரஞ்சு பழ சுளை போன்ற மிட்டாய்கள் அப்போது ரொம்ப பேமஸ் ,அதனை என் வகுப்பு தோழர்களுக்கும் தோழிகளுக்கும் கொடுத்து விட்டு பள்ளியில் உட்கார்ந்தேன்..
டீச்சர் கமலாம்பாள் என்பவர் எனக்கு வகுப்பு ஆசிரியை.... “அ” என்பதை மட்டும் முதல் நாள் பாடமாக, போர்டில் எழுதி போட்டு அதனை அனைவரும் எழுதினோம் ..டீச்சர் பலப்பத்துடன் வந்து எல்லோருடைய சிலேட்டிலும் ரைட் போட்டு சென்றார்....
அதன் பிறகு 3ஆம் வகுப்பு வரை சிலேட்டும் பலப்பமாகவே பள்ளி வாழ்க்கை ஓடியது...
ஒரு பாடம் எழுதி அதன் பிறகு கணக்கு பாடம் எழுத சிலேட்டை அழிக்க என்ன செய்வேண்டும் என்றால் சட்டென சிலேட்டில் (எச்சிலை) காரி துப்பி அதனை சட்டென்று துடைத்து அடுத்தபாடம் எழுதுவோம்.... என் வகுப்பில் ஆனந்தன் என்பவன் படித்தான் அவன் சிலேட்டில் பாடம் அழிக்க எச்சில் துப்பினான் என்றால் , நான்கு பேர் தள்ளி உட்கார்ந்து இருக்கும் என் மேல் தெரிக்கும் என்றால் பார்த்துகொள்ளுங்கள்....
ஒரு நாளைக்கு ஆனந்தன் சிலேட்டு துடைக்க துப்பிய எச்சிலை மட்டும் சேகரித்தால் ஒரு ஆப் லிட்டர் பெப்சி பாட்டில் அளவுக்கு சேகரிக்கலாம்....
ஒரு சில நேரத்தில் பள்ளிக்கு பல் விளக்காமல் வந்து விடுவான்...ஊத்தை நாற்றத்தோடு சேர்ந்த எச்சிலை...அதோடு கூடிய ஒரு வித நாற்த்தை வகுப்பு முழுவதும் ஆக்ஸ் ஸ்பிரேயர் போல் வகுப்பு முழுதும் மனம் கமழ செய்வான்...
அதே போல் சிலேட்டில் பால் அச்சு கொட்ட கோவை கொடி இலைகளை பயன்படுத்துவோம்... அப்படி பயன் படுத்தும் போது சிலேட்டில் இலையை நசுக்கும் போது ஒரு வாசம் வரும்.. அந்த வாசத்தை இப்போது உள்ள பிள்ளைகள் அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை....
இரண்டாவது வந்ததும் கொஞ்சம் நாகரிகம் கற்று கற்பூர டப்பாக்களில் கோவை இலைகளை பறித்து ஸ்டாக் வைத்து சிலேட்டில் எச்சி துப்பி துடைப்பதற்க்கு பதில் பயன்படு்த்துவோம்... இதில் பிரச்சனை என்வென்றால் 4 நாளைக்கு முன் பறித்த இலை சின்ன டப்பியில் காற்று போகாமல் புழுங்கி ஒரு வித அழுகின நாற்றத்துடன் யூஸ் செய்வோம்.... அப்போதும் கூட ஆனந்தன் சிலேட்டை எச்சில் துப்பிதான் துடைப்பான்....
பலப்பம் போல் டேஸ்ட்டான ஒரு உணவு பொருள் உலகத்தில் வேறு ஏங்காவது இருக்கின்றதா என்று தெரியவில்லை... பொதுவாக மதியம் 3 மணிக்கு மேல் சற்று வெறுப்பாக இருக்கும் நேரத்தில் பலப்பம் சாப்பிடுவோம்...நல்ல டேஸ்ட்...
40 பிள்ளைகளும் தலைமை ஆசிரியர் வகுப்புக்கு வரும் போது, எழுந்த வணக்கம் சொல்ல எழுந்தால், தரையில் பயத்தில அவசரத்தில், பலப்பத்தை விபூதிக்காக தரையில் தேய்த்த சுவடுகள் எல்லோரும் எழுந்து நிற்க்கும் போது தரையை பார்த்தால் அந்த தேய்த்த சுவடுக்ள் ஒரு மார்டன் ஆர்ட் போல் இருக்கும்....
கல் சிலேட்டகள்தான் என் பேவரெட் ஆனால்,அந்த சிலேட்டுகள் கைதவறினால் கோவிந்தாதான்...அதன் பிறகு தகரத்தில் சிலேட்டுகள் வந்தன ... ஆனால் அதில் கோவை இலையை வைத்து அழி்த்த பின் தகர சிலேட்டுகளில் நன்றாக எழுத வராது....கல் சிலேட்டுகள் போல் பால் அச்சி கொட்டாது...
பலப்பத்தில் ட கருப்பு கலரில் குச்சி போல் சில பலப்பங்கள் வந்தன இருந்தாலும் பால் அச்சி கொட்டாத காரணத்தால் அவைகள் சடுதியில் மறைந்தன....சிலேட்டில் பலப்பத்தில் எழுத பழகிய கை விரல்கள் இப்போது கம்யூட்டர் கீ போர்டுகளில் தமிழ்வார்த்தை உருவாக்க நாட்டியம் ஆடுகின்றன... காலம்தான் எவ்வளவு விரைவாய் மாற்றங்களை விரைந்து அறிமுகபடுத்துகின்றது...
No comments:
Post a Comment