Sunday, 21 August 2011

மாணவனின் நகைச்சுவை ...!


        ரு தமிழாசிரியர் வகுப்பில் அரக்கன் உலகை பாயாக சுருட்டினான் என்று கதை சொன்னார். ஒரு மாணவன்,''ஐயா... அரக்கன் உலகை பாயாக சுருட்டினான் என்றால் எந்த இடத்தில் நின்று கொண்டு சுருட்டினான்?'' என்று கேட்டான். ஆசிரியருக்கு பதில் தெரியவில்லை.
உடனே கேள்வி கேட்ட மாணவனிடம், ''ஏண்டா … திருக்குறளை மனப்பாடம் செஞ்சுட்டு வந்தியா? வீட்டுப் பாடங்களைச் செஞ்சுட்டு வந்திருக்கியா? எனக் கேட்டார், மாணவன் முழித்தான்.
''அதச் செய்யாதே, கேள்வி மட்டும் கேளு.. ஏறு பெஞ்சு மேலே'' என்றார்.
மாணவனுக்குக் கேள்விக்குப் பதில் தெரியாட்டியும், ஆசிரியருக்குப் பதில் தெரியாட்டியும் நாம்தான் பெஞ்சு மேலே ஏற வேண்டியிருக்கும், என்றான் மாணவன்!.

No comments:

Post a Comment