Friday, 5 August 2011

விதவிதமா...

மீல் மேக்கர் 65’ செய்ய முடியுமா..? 
 
உப்புக் கலந்த தண்ணீரில் மீல் மேக்கரை பத்து நிமிடம் ஊற வைத்து... பிறகு, அவற்றைத் தனியாக எடுத்து நன்றாகப் பிழிந்து கொள்ளவும். கலந்து வைத்துள்ள மசாலாத்தூளில் மீல் மேக்கரைத் தோய்த்து எண்ணெயில் போட்டு, பொரித்து எடுத்தால்... 'மீல் மேக்கர் 65’ எனும் சூப்பர் டிஷ் ரெடி! தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்..

பலாக்கொட்டை ரோஸ்ட் சாப்பிட்டிருக்கிறீர்களா?
பலாக்கொட்டைகளை வேக வைத்து தோல் நீக்குங்கள். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகப் பிசறிக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, பிசறிய பலாக்கொட்டைகளைச் சேர்த்து வறுத்தெடுங்கள். அபாரமான டேஸ்ட்டுடன் அசத்தல் ரோஸ்ட் ரெடி!

சுவையான மோர்க் குழம்பு தயாரிக்க வேண்டுமா
 

தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து... அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயம் தாளித்து இந்தக் கலவையைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கியதும், அடுப்பை அணைக்கவும். உடனே, மோரைச் சேர்த்து நன்கு கலக்கி விட, ருசியான மோர்க்குழம்பு தயார். தேவைப்பட்டால்... வெண்டைக்காய், பரங்கிக்காய் என்று சேர்த்தும் தயாரிக்கலாம்.
நன்றி - விகடன்

No comments:

Post a Comment