Wednesday, 22 October 2014
Wednesday, 15 October 2014
தகவல் அறியும் உரிமை..!
""தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல் கேட்போருக்கு, குறித்த நாட்களுக்குள் பதில்களை அனுப்பாவிட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்களின் வேலைக்கு பாதிப்பு ஏற்படும்,'' என, காஞ்சிபுரம் கலெக்டர் சிவசண்முகராஜா, அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வுக் கூட்டத்தில் அவர் கூறியதாவது: தகவல் அறியும் உரிமைச் சட்டம் "பவர்புல்'லானது, அதற்காகச் சென்னையில், 10 கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மனுதாரர்களுக்கு சரியான பதிலை, 30 நாட்களுக்கு கொடுக்காவிட்டால், அவர்களது வேலைக்கு பாதிப்பு ஏற்படும், என்றார்.
உலகில் மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் எத்தனையோ இருக்கின்றன. இந்த உலகில் கடந்த காலத்தில் இருந்தவை, நிகழ்காலத்தில் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிதாய்த் தோன்றிய தோற்றங்கள் என எண்ணிலடங்காத பொருள்கள், உயிர்கள் எத்தனையோ இருக்கின்றன. இவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் ஆசைப்பட்டாலும், அவைகளை எல்லாம் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ள மனிதனின் வாழ்க்கை போதுமானதாக இருக்காது. மனிதன் அறிந்து கொள்ள எத்தனையோ தகவல்கள் இந்த உலகில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதுப்புதுத் தகவல்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. மனிதன் எல்லாத் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியாது. மனிதனுடைய அறிவுத் தேடலுக்குத் தேவையான சில தகவல்களைத் தேடி அதைத் தெரிந்தவர்களிடம் செல்கிறோம். சில தகவல்களுக்காக நூலகங்களுக்குச் செல்கிறோம். சில தகவல்களுக்காக என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவைத் தேடுகிறோம். தற்போது இணையத்தின் வழியாகவும் தேடுகிறோம். இந்தத் தேடுதலுக்கு விடை கிடைத்து விடுகிறது. அரசுப் பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்துத் தெரிந்து கொள்ள விரும்பினால் மட்டும் நமக்கு எந்தத் தகவல்களுமே கிடைப்பதில்லை. ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அவன் விரும்பும் தகவல் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் எழுந்த போது அதற்கு அரசின் சில சட்டதிட்டங்கள் இடையூறாக இருந்தது. இது மாற்றப்பட வேண்டும். அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்தியத் தகவல் உரிமைச் சட்டம்-2005.
நோக்கம் :
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் மற்று அரசு சார்பு நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். அரசுத் துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால் அதையும் இச்சட்டத்தின் கீழ் பெற முடியும். இந்தியக் குடியுரிமை பெற்ற எவரும் இந்தச் சட்டத்தின் வழியாக தகவல்களைக் கோர முடியும். இதன் வழியே
1. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்
2. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.
3. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை செய்தல். இதன் மூலம் லஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழித்தல்.
4. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.
போன்றவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன.
தகவல்கள்:
தகவல் என்றால் என்ன? தகவல் என்பது எதைக் குறிப்பிடுகிறது? என்கிற எண்ணம் நமக்கு வரலாம். தகவல் என்பது பதிவேடுகள், ஆவணங்கள், கடிதங்கள், இ-மெயில்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள் உள்ளிட்ட அனைத்துமே "தகவல்" என்ற பிரிவின் கீழ் வைக்கப்படுகின்றன. இதன்படி கீழ்காணும் அனைத்தும் தகவல்கள்தான்.
1. அரசிடமுள்ள ஆவணங்களில் இருந்து குறிப்புகள் எடுத்தல்
2. அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை நகல் எடுத்தல்
3. அரசின் பணிகளைப் பார்வையிடுதல்
4. அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பார்வையிடுதல்
5. சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுதல்
6. தேவையான தகவலைத் தேவைப்படும் வடிவத்தில் பெறுதல்
தகவல் பெறுவதன் நன்மைகள் :
தகவல்களைப் பெறுவதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கப் போகிறது? என்கிற கேள்வி நமக்குத் தோன்றலாம். ஒரு அரசு நிறுவனத்தில் இருந்து எந்தத் தகவலையும் பெற முடிகிறது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தின் பொறுப்பும், வெளிப்படையான செயல்களும் அதிகரிக்கிறது. இதன் மூலம் ஓரளவு லஞ்சம் மற்றும் ஊழல் போன்றவை குறைய வாய்ப்பிருக்கிறது. அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதையும் நாம் இந்தத் தகவல் உரிமைச் சட்டத்தின் வழியாகத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் குறைகள் இருப்பின் அதைச் சரி செய்ய வேண்டும் என்கிற பொறுப்பும் அரசுக்கு ஏற்படும். இதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பில் மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வழி ஏற்படுகிறது.
மாநிலத் தகவல் ஆணையம்:
தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 15-ன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இச்சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஆணையம், ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீழ் கடந்த 07.10.2005 ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 5, உட்பிரிவு 1-ன்படி, தகவலுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு, தகவல் அளிப்பதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும், பொதுத்தகவல் அலுவலர் என்கிற பொறுப்பில் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் உட்பிரிவு 2-ன்படி, தகவல் கோரும் விண்ணப்பங்களை அல்லது மேல்முறையீடுகளைப் பெற்று, அவற்றைப் பிரிவு 19, உட்பிரிவு 1-ன்படி, பொது தகவல் அலுவலருக்கோ அல்லது மாநில தகவல் ஆணையத்திற்கோ அனுப்பி வைப்பதற்காக அலுவலர் ஒருவர் ஒவ்வொரு உட்கோட்ட அல்லது உள்மாவட்ட நிலையில் உதவி பொதுத்தகவல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். தலைமைச் செயலகம், துறைத்தலைவர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் போன்றவற்றில் தகவல் பெறுவதற்காக பொதுத்தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் போன்றவர்களின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவைகள் தரப்பட்டுள்ளன. இவை குறித்த சில விபரங்கள் அரசின் இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி?
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 6-ன்படி, தகவல் பெற விரும்புபவர், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில், ஒரு வெள்ளைத் தாளில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன், இதற்கான கட்டணமாக ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) வரைவோலை (Demand Draft) அல்லது அரசு கருவூல சீட்டு (Treasury Challan) மூலம் செலுத்தி அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் ரூ.10/-க்கான நீதிமனற வில்லை (Court Fee Stamp) அந்தப் படிவத்தில் ஒட்டிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் ரூ.10/- செலுத்திய விபரம் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் தேவைப்படும் தகவலின் விபரங்களை எந்த வடிவத்தில் வழங்க வேண்டும் என்பது குறித்த தகவலுடன் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து வடிவில் விண்ணப்பம் செய்ய முடியாத நிலையில், அதனை எழுத்து வடிவில் செய்திட அனைத்து உதவிகளையும் பொதுத் தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர் செய்திட வேண்டும்.
தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடம் அந்த தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் மற்றும் அவரைத் தொடர்பு கொள்வதற்குத் தேவையான விபரங்களைத் தவிர, தனிப்பட்ட சொந்த விவரங்கள் எவற்றையும் கோருதல் கூடாது.
ஒரு தகவலுக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகம் ஒன்றிடம் விண்ணப்பம் செய்யப்படுகிற நிலையில், அந்தத் தகவல் பிற அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் வைத்திருக்கப் பட்டதாக அல்லது அதன் உரிய பொருள் பிற அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயற்பணிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கும் போது, அந்த விண்ணப்பத்தினை அல்லது அதன் உரிய பகுதியை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாற்றல் செய்து அனுப்பி விட வேண்டும். மாற்றல் செய்து அனுப்பப்பட்ட விபரத்தை விண்ணப்பதாரருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு தகவல் கேட்கும் விண்ணப்பதாரகளுக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும். தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம். தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்கத் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.
மேல்முறையீட்டிற்கான அலுவலக முகவரிகள்:
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:
தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண் 375, முதல் தளம்,
காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் ,
தேனாம்பேட்டை,
அண்ணாசாலை ,
சென்னை- 18.
தொலைபேசி எண்: 044 -24357580.
மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:
மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன் 2 வது தளம்,
பி-பிரிவு. நியு பிகாஜி காமா பேலஸ்
டெல்லி-110056
தொலைபேசி எண்கள்: 011-26717353, 26761137.
2005 ஆம் வருடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இந்திய அரசு இயற்றியுள்ளது(www.persmin.nic.in). 2005 அக்டோபர் 13 ஆம் தேதியிலிருந்து இது அமலுக்கு வருகிறது. பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் மறைவேதும் இல்லாமல் பொதுமக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியவும், அந்த நிறுவனங்களின் செயல் பாட்டுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பொறுப்பேற்க வைக்கவும், பொதுமக்கள் அந்த நிறுவனங்களின் செயல் பாட்டினை அறிந்து கொள்ள வழிவகை செய்யும் சட்டம் தான் இச்சட்டம். இச்சட்டத்தின் பிரிவுகள் 8,9 இன் கீழ் சில வகையான தகவல்கள் வெளியிடப் படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. தலைமைப் பொதுத்தகவல் அலுவலர் ஒருவரையும் நியமிக்க இச்சட்டம் வழிவகுக்கிறது.
பிரிவு 4(i)(b) - தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005
பிரிவு 4(1)(b)
சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட வேண்டிய தகவல்கள் :
(i) அமைப்பு / நிறுவனத்தின் விபரங்கள், பணிகள், கடமைகள்
(ii) அதிகாரிகள், அலுவலர்களது பணிகளும் அதிகாரங்களும்
(iii) மேற்பார்வையிடுதல், பொறுப்பேற்பது உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் விதம் பற்றிய நடைமுறைகள்
(iv) தனது பணிகளைச்செய்ய வங்கியின் வழிமுறைகள்
(v) வங்கி வைத்திருக்கும் / கையாளும் விதிகள், ஒழுங்குமுறைகள், அறிவுரைகள், அறிவுரைகளின் தொகுப்புகள், ஏடுகள் – அதிகாரிகளும் அலுவலர்களும் தங்கள் தங்கள் பணிகளைச்செய்யப் பயன்படுத்தும் ஏடுகள்
(vi) ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆவண வகைகளின் பட்டியல்
(vii) பொதுமக்கள் / அவர்கள் பிரதிநிதிகளைக் கலந்து முடிவுகள் எடுக்க / அமலாக்க ஏதேனும் திட்டம்/பழக்கம்
(viii) அறிவுரைக்காக குழுமம், குழு – 2 அல்லது அதற்கு மேற்பட்டதாக கொண்ட அமைப்பு – இந்த அமைப்புகளின் கூட்டம் பொது மக்களுக்குத் திறந்து விடப்படுகிறதா
(ix) அதிகாரி / அலுவலர் பெயர் முகவரி கொண்ட தொகுப்பு
(x) மாதச்சம்பளம் / சலுகைகள்
(xi) திட்டங்கள் / பட்ஜெட்டுகள் / உத்தேச செலவுகள்
(xii) பொருந்தாதது
(xiii) சலுகைகள் பெறுவோர் விபரம், அங்கீகாரம்
(xiv) மின் அணுமுறையில் கொ டுக்கப்பட்ட தகவல்களின் விபரங்கள்
(xv) தகவல் பெற குடிமக்களுக்கு உள்ள வசதிகள், பொது உபயோகத்துக்கான நூலகம், படிப்பறைகளின் வேலை நேரங்கள்
(xvi) பொதுத் தகவலதிகாரியின் பெயர் மற்றும் முகவரி.
Tuesday, 30 September 2014
அழகான குறிப்புகள்..!
1. தலை முடி வளர:
அரை லிட்டர் நல்லெண்ணெய்யை காய்ச்சி இறக்கி அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயை அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வரவும். தலையில் தேய்க்கு முன் இலேசாக சூடு படுத்தித் தேய்க்கவும்.
2. வளமான தலைமுடிக்கு:
தலை குளிக்கப் போகுமுன் பாதாம் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து தலையில் தேய்த்து அரை மணி
நேரம் ஊற வைத்து தலை குளிக்கவும். இது முடி கொட்டுவதையும்
நிறுத்தும்.
3. முடி கொட்டுவது நிற்க:
ஆலிவ் எண்ணெயில் ஒரு முட்டை கலந்து தேய்த்து தலை குளித்து வரவும்.
4. கண்கள் கீழுள்ள கருவளையங்களைப் போக்க:
அரை ஸ்பூன் விளக்கெண்ணெய், அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து குழைத்து தடவி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
5. பாத வெடிப்பு:
தொடர்ந்து கடுகெண்ணெயைத் தடவி வந்தால் சரியாகி விடும்.
6. தலையில் ஏற்படும் வழுக்கை, சொட்டை முதலியவை நீங்க:
தாமரைஇலைகளைப் பறித்து சாறெடுத்துக்கொள்ளவும். அதற்கு சமமான அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சவும். நீர்ப்பசை நீங்கி தைலம் மேலே மிதக்கத் தொடங்கியதும் ஆறவிட்டு பத்திரப்படுத்தவும். இதை தினமும் தடவி வந்தால் வழுக்கை மறைந்து முடி நன்கு வளரும்.
7. முகப்பொலிவிற்கும் அழகிற்கும் ஒரு face pack!
தேவையான பொருள்கள்:
பாசிப்பயிறு- 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள்- 100 கிராம்
கசகசா- 10 கிராம்
உலர்ந்த ரோஜா மொட்டு- 5 கிராம்
பூலாங்கிழங்கு- 5 கிராம்
எலுமிச்சை இலை, வேப்பிலை, துளசி இலை மூன்றும் 2 கிராம்.
மொத்தமாக அரைத்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் சிறிது எடுத்து தயிரில் கலந்து முகம் கழுத்தில் தடவி வந்தால்
மாசு மருவற்ற முகம் கிடைப்பதுடன் நிறமும் நாளடைவில் சிவக்க ஆரம்பிக்கும்.
Friday, 26 September 2014
புரிஞ்சுதா...?
கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி
என்றால்
என்ன..?

கியாரண்ட்டி’
என்றால்
‘உத்திரவாதம்’
என்பது
எல்லோருக்கும்
தெரிந்ததே.
‘வாரண்ட்டி’
என்பதும்
கிட்டத்தட்ட
அதே
பொருளைக்
குறிக்கும்
சொல்தான்.
ஆனால்
சட்டத்தின்
பார்வையில்
‘கியாரண்டி’
என்றால்
‘பொருளை
மாற்றிக்
கொடுப்பது,’
வாரண்டி
என்றால்
‘சர்வீஸை’க் குறிப்பது.
அதாவது,
ஒரு
பொருள்
வாங்கிய
பின்னர்
ஒரு
குறிப்பிட்ட
காலத்திற்குள்
அது
சரியாக
வேலை
செய்யாவிட்டால்,
மாற்றிக்
கொடுப்பார்கள்.
ஆனால்
தற்போது,
பொருளை
மாற்றிக்
கொடுப்பதில்லை.
ரிப்பேர்தான்
செய்து
கொடுக்கிறார்கள்.
சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, ‘லாப்_டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக்கில்’ செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட்டிக்கழித்துவிட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியாரண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி_வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்!
பொருட்களை விற்பனை செய்யும்போது, உபயோகிக்கும் முறையை விளக்க ‘இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல்’ கொடுக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து நம்மால் எதுவும் புரிந்து கொள்ள முடிவதில்லை.
மேலே சொன்ன ‘லாப்_டாப்’ விஷயம் போல் ‘மைக்ரோவேவ் அவன்’ பற்றிய ஒரு செய்தி. பெரும்பாலான ‘மைக்ரோ வேவ் அவன்’கள், 15 ஆம்பியர், கரண்டைத் தாங்கும் சுவிட்சுகளில்தான் வேலைசெய்யும். பல வீடுகளில் இந்த வசதி இருக்காது. இதனால், சிலர், ‘அவன் வேலை செய்யவில்லையென்று’ பதட்டப்படுவார்கள். வேறு சிலர், ஆர்வக் கோளாறு காரணமாக இயங்கவைக்க வேண்டுமென்று ஏதாவது செய்து, ‘மைக்ரோ_வேவ் அவனை’ ரிப்பேர் செய்துவிடுவார்கள். அப்படி ரிப்பேரானால், இந்த ‘கியாரண்ட்டி_வாரண்ட்டி’ வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி, ஏமாற்றிவிடுவார்கள். ‘15 ஆம்ஸ் சுவிட்ச்’ இல்லாதவர்கள், ஒரு ‘சுவிட்ச் கன்வெர்டர்’ வாங்கி பிளக்கில் செருகினால், ‘அவன்’ வேலை செய்யும். இதை அவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் போடுவதில்லை.
நுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, ‘டிமாண்ட் டிராஃப்ட்’ சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’
யார் நுகர்வோர்?
தனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும். ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது.
-Via- நெல்லை களஞ்சியம்

Wednesday, 13 August 2014
நாட்கள் மீண்டும் வந்திடாதோ?
1930- 1985 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!
• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
• புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்
• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
• இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.
இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்???
Monday, 4 August 2014
ஓ... அப்படியா ?
* ஆசியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்டவர் – ராபட்கிளைவ்.
* ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு -ரஷ்யா.
* தொழிற்சாலையில் நொதித்தல் நிகழ்ச்சியில் பயன்படுவது – ஈஸ்ட்
* வளையாமல் நேராகச் செல்லும் நீளமான ரெயில் பாதை உள்ள நாடு -ஆஸ்திரேலியா-478 கி.மீ
* உலோகங்களை உருக்கி இணைக்கப் பயன்படுவது -ஆக்சிஅசிட்டிலின்.
* காய்களை பழங்களாக்க பயன்படுவது -எத்திலின்.
* விண்வெளியில் உணவாகப் பயன்படுவது -குளோரெல்லா.
* முடிச்சாயம் தயாரிக்கப் பயன்படுவது -வெள்ளிநைட்ரேட்.
* குடி நீரில் நோய் கிருமிகளை அழிக்க பயன்படுவது -குளோரின்.
* விவாகரத்துக்கு அனுமதி இல்லாத நாடு -அயர்லாந்து.
* பட்டாசு தயாரிப்பில் பயன்படுவது – பொட்டாசியம் நைட்ரேட்.
* மிகப்பெரிய தங்கச்சந்தை உள்ள இடம் -லண்டன்.
* இலைகளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம் -செரி.
* பச்சையம் இல்லாத தாவரம் -காளான்.
* சிலந்தி வகைகளில் அதிக விசமுள்ளது – தி பிளாக் விடோ.
* நீரில் நீந்திக் கொண்டே உறங்கும் உயிரினம் -வாத்து.
* யானையைப் போன்று தந்தம் உள்ள விலங்கு -வால்ரஸ்.
* நின்று கொண்டே உறங்கும் விலங்கு -குதிரை.
* ஈர்ப்புவிசை மிகக்குறைவான கோள் -புதன்.
* இறந்த உடலை பாதுகாக்க பயன்படுவது -பார்மால்டிகைடு.
* துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு – ஸ்பெயின்.
* காந்தியடிகளுக்கு மகாத்மா காந்தி என்ற பட்டத்தை சூட்டியவர் – ரவீந்திரநாத் தாகூர்!
* உலகிலேயே மிக அதிகமான நூல்களை எழுதியவர் – அலெக்சாண்டர் டூமாஸ்.

Friday, 1 August 2014
விவேகானந்தர்......
விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்...
அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.
நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்...
என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.
அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும், ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.
அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப் போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டுவிடேன்.
இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..
இதுதான் அறிவின் முதிர்ச்சி...!
ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு...!
Thursday, 31 July 2014
இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் ?
இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் ?
01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.
02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.
03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.
04. 1835 ல் அவரது காதலி மரணம்.
05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.
06. 1838 ல் தேர்தலில் தோல்வி.
07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.
08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.
09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.
10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.
11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.
12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை.
உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்.

Friday, 25 July 2014
இப்படிக்கு, ஆபிரகாம் லிங்கம்.
ஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
நமக்கு முதல்முறையாக எழுத கற்பித்த ஆசிரியர் இன்றும் அதே ஆசிரியராகவே இருக்கிறார். ஆனால், அவரால் கற்பிக்கபட்டவர்கள் அவரை விட பணம் மற்றும் பதவியில் உயர்ந்த இடத்தில இருக்கிறார்கள் என்பதே உண்மை அல்லவா? .
இங்கே,அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு.ஆபிரகாம் லிங்கம் அவர்கள், தனது மகனின் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எழுதிய ஒரு கடிதம்.
ஒரு மாணவனுக்கு ஆசிரியர் கற்பிக்கவேண்டியவை எவை என்று பட்டியல் தருகிறார் திரு.ஆபிரகாம் லிங்கம்.
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
என் மகன், அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும் உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல, பின்பற்றத்தக்கவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று, அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும்,
ஒவ்வொரு பகைவனைப் போல, ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
அடுத்து நான் சொல்ல வருவதை, அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள். பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை கற்றுக் கொடுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள்.
புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை, பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
கும்பலோடு கும்பலாய் கரைந்து போய் விடாமல், சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
கஷ்டமான சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
தன் செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் உறுதி அவனுக்கு வேண்டும். ஆனால், தன் இதயத்திற்கும், தன் ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
இது, மிகப்பெரிய பட்டியல் தான். இதில், உங்களுக்குச் சாத்தியமானதை எல்லாம் அவனுக்கு, நீங்கள் கற்றுக் கொடுங்கள்.
அவன் மிக நல்லவன், என் அன்பு மகன்.
இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கம்.

கறுப்புப் பெட்டி....
உண்மைகளைக் கண்டறிய உதவும் கறுப்புப் பெட்டி
“கறுப்புப் பெட்டி” என்பது விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு இன்றியமையாத கருவியாகும். விமானம் இயங்கிக் கொண்டிருக்கும்போது விமானிகளுக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை இந்த கறுப்புப் பெட்டி பதிவு செய்து கொண்டே இருக்கும்.
விமானம் எவ்வளவு பெரிய விபத்தை சந்தித்தாலும், முழுவதும் தீப்பிடித்து எரிந்தாலும், அல்லது கடலில் விழுந்து மூழ்கினாலும், இந்த கறுப்புப் பெட்டி எவ்வித சேதமும் இல்லாமல் தப்பிவிடும். அந்த அளவுக்கு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது. பிறகு அதனுள் பதிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு விமானம் விபத்திற்குள்ளான காரணத்தை அறியலாம்.
இந்த கறுப்புப் பெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால் பகுதியில் அல்லது மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும், அப்போது தான் எவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டாலும் சேதமடையாமல் இருக்கும். ஒரு விமானத்தில் மொத்தம் 2 கறுப்புப் பெட்டிகள் இருக்கும். பெரிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் “பிளைட் டேட்டா ரெகார்டர்”. இது விமானம் பறக்கும் நேரம், வேகம், உயரம் ஆகிய விபரங்களை பதிவு செய்யும். சிறிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் “வாய்ஸ் ரெகார்டர்”. இது விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும்.
வரலாறு :
கறுப்புப் பெட்டியை 1953 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் கண்டுப்பிடித்தார். 1934 ஆம் ஆண்டு இவரின் தந்தை விமான விபத்தினால் மறைந்தார். ஆனால் விபத்திற்கான காரணம் கடைசி வரை தெரியவில்லை. இதனால் விமானங்கள் விபத்திற்குள்ளாகும் போது அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என்று ஆராய்சியில் ஈடுபட்டு கறுப்புப் பெட்டியை கண்டுபிடித்தார்.
சில ஆச்சர்யமான தகவல்கள் :
கறுப்புப் பெட்டியின் உண்மையான நிறம் கருப்பு அல்ல “ஆரஞ்சு நிறம்
ஒரு கறுப்புப் பெட்டி கடைசியாக நடந்த 25 மணி நேர விமானத் தகவல்களையும், 30 நிமிட விமானிகளின் உரையாடல்களையும் கொண்டிருக்கும்.
கறுப்புப் பெட்டியின் உறுதிக்கு காரணம் அலுமினியம், சிலிகா, டைட்டானியம், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் ஆகியவை கலந்த கலவையால் அது உருவாகப்படுவது தான்.
விபத்து நடந்த பிறகு கறுப்புப் பெட்டியிலிருந்து “பீப்” சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இது பெட்டியை கண்டுபிடிக்க உதவுகிறது.
இது 2000 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும், 2000 கிலோ எடையுடைய பொருள் விழுந்தாலும், 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் சேதமாகாது.